செய்திகள் :

`எல்லாம் சரி, அந்த கொண்டாட்டத்துக்கு என்ன அர்த்தம்?' - வைபவ் சூரியவன்ஷி சொன்ன சிம்பிள் பதில்

post image

தொடரின் மிக முக்கியமான கட்டத்தில், தனது மூன்றாவது ஆட்டநாயகன் விருதை வென்ற இளம் வீரர், களத்தில் காட்டும் அதே பாணியை தனது பேச்சிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்றைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பின்னர் பேசிய இளம் சூறாவளி வைபவ் சூரியவன்ஷி, “ நாங்கள் பந்துவீசும்போது வெளியே அமர்ந்து ஆடுகளத்தைக் கவனித்தேன். அது பேட்டிங்கிற்கு நன்றாக இருந்தது. அதனால், தொடக்கத்தில் அவசரப்பட வேண்டாம், சிறிது நேரம் எடுத்துக்கொண்டு நீண்ட நேரம் பேட் செய்தால், அது மறுமுனையில் உள்ள பேட்டருக்கும் உதவியாக இருக்கும் என்று நினைத்தேன். அதுவே எனது திட்டமாக இருந்தது." என்றார்.

வைபவ் சூரியவன்ஷி
வைபவ் சூரியவன்ஷி

நிதானத்தின் பின்னணியில் நம்பிக்கை!

மெதுவாகத் தொடங்கினாலும், அரைசதத்தை வேகமாக எட்டியது குறித்துக் கேட்டபோது, "அதுதான் என் மனநிலை. என்னால் எப்போது வேண்டுமானாலும் இரண்டு மூன்று பவுண்டரிகள் அல்லது சிக்ஸர்கள் அடிக்க முடியும் என்று எனக்குத் தெரியும். அதனால், தொடக்கத்தில் அவசரப்படாமல், சிறிது கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்ல முயற்சிக்கிறேன்" என்று தன்நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

வெளியுலகப் புகழ்ச்சிக்கு செவி சாய்ப்பதில்லை!

இளம் வயதில் கிடைக்கும் அதீத கவனம் மற்றும் புகழ்ச்சியை எப்படி கையாள்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், பலரையும் ஆச்சரியப்படுத்தியது. "நான் அதிகமாக எதையும் பார்ப்பதில்லை. செய்தித்தாள்கள் படிப்பதில்லை. அதனால் இதைப் பற்றியெல்லாம் நான் பெரிதாக சிந்திப்பதில்லை. இது எனது பயணத்தின் ஆரம்பம் மட்டுமே. நான் நீண்ட காலம் விளையாடினால், மக்கள் இன்னும் பல விஷயங்களைப் பேசுவார்கள். என் கவனம் ஆட்டத்தில் மட்டுமே இருக்க வேண்டும், என் பயணத்தை நான் முழுமையாக முடிக்க வேண்டும்" என்று பக்குவமாகப் பேசினார்.

வைபவ் சூரியவன்ஷி
வைபவ் சூரியவன்ஷி

கொண்டாட்டங்களுக்கு அர்த்தம் தேடாதீர்கள்!

ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுவதன் பின்னணி என்ன என்று கேட்டதற்கு, "சார், எனக்கே தெரியாது. ஒவ்வொரு போட்டியிலும் புதிதாக எதையாவது செய்கிறேன். நான் அதைத் திட்டமிடுவதில்லை. அதற்குப் பின்னால் எந்த அர்த்தமும் இல்லை. கடந்த போட்டியில் நான் செய்த கொண்டாட்டத்திற்கும் கூட அர்த்தம் கிடையாது. நான் புதிய விஷயங்களை முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

வைபவ் சூரியவன்ஷி
வைபவ் சூரியவன்ஷி

இனி இலக்கு இறுதிப்போட்டி மட்டுமே!

இறுதிப்போட்டியை எதிர்நோக்கியுள்ள நிலையில், அணியின் மனநிலை எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, "எங்கள் கவனம் எல்லாம், ஆட்டத்தை ரசித்து விளையாட வேண்டும் என்பதில்தான் இருக்கிறது. அடுத்த போட்டியிலும் களத்திற்கு வெளியே நடக்கும் விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த மாட்டோம். ஒவ்வொருவரும் ஆட்டத்தில் கவனம் செலுத்தி, தொடர் முழுவதும் நாங்கள் விளையாடியது போலவே மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும். இந்தத் தொடரில் ஏற்ற தாழ்வுகள் இருந்தன, ஆனால் நல்ல கிரிக்கெட்டை விளையாடி போட்டிகளை வெல்வதே எங்கள் நோக்கம், அவ்வளவுதான்" என்று கூறி முடித்தார்.

CSK: `கேப்டன்சியில் தடுமாறும் ருதுராஜ்; அடுத்த சீசனில் சஞ்சு சாம்சன்.!' - முன்மொழிந்த மனோஜ் திவாரி

ஐபிஎல் தொடரில் மற்றுமொரு ஏமாற்றமளிக்கும் சீசனுக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பொறுப்பில் பெரிய மாற்றம் வரலாம் என்ற பேச்சுகள் எழத்தொடங்கியுள்ளது. இந்த சீசனில் முதல் நான்கு இடங... மேலும் பார்க்க

CSK: 'அணியின் முன்னேற்றத்திற்கு சற்று காலம் எடுக்கும்; ஆனால் ருதுராஜ் தனது வேலையை.!'- பிளெமிங்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே-18) ஆட்டத்தில் சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது சென்னை அணி. இதன் மூலம் சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்... மேலும் பார்க்க

CSK vs SRH: “அடுத்த ஆண்டு புதிய சிஎஸ்கேவாக மீண்டெழுவோம்!” - கேப்டன் ருதுராஜ் நம்பிக்கை

ஐபில் தொடரில் நேற்று (மே-18) நடைபெற்ற சென்னை vs ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி சென்னை அணிக்கு ஒரு வாழ்வா, சாவா போட்டியாக பார்க்கப்பட்ட போ... மேலும் பார்க்க

IPL: ஆர்சிபி முதலிடம்; பஞ்சாப்பிற்கு சறுக்கல்! - ப்ளே ஆஃப் மேடையை அலங்கரிக்கப்போகும் அணிகள் எவை?

2026 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிகாரபூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக கம்பீரமாக நிற்க, மீதமுள்ள 3 இடங்களுக்கான பலப்பரீட்சை... மேலும் பார்க்க

'டாப்-4 இடத்திற்கான பட்டியலில் இருப்பதற்கு எங்களுக்கு தகுதியில்லை'- ரியான் பராக் கூறியது என்ன?

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.17) ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது. ப்ளே-ஆஃப... மேலும் பார்க்க

DC vs RR: ஸ்டார்க் வீசிய 'ஒற்றை' ஓவர்... ராஜஸ்தானின் ப்ளே ஆஃப் கனவு எங்கோ!

தொடரின் தொடக்கத்தில் வரிசையாக வெல்வதும் இறுதியில் தோல்விமுகத்தோடு தத்தளிப்பதும் ராஜஸ்தானுக்கே கைவந்த கலை.முதல் ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோற்றிருந்த ராஜஸ்தான், அடுத்து வந்த ஐந்து போட்டிகளில் ஒன... மேலும் பார்க்க