செய்திகள் :

எல்லாவற்றுக்குமான செயலியாக மாறும் X: `2036-ல் பணம் முக்கியத்துவத்தை இழக்கும்' - எலான் மஸ்க் கணிப்பு

post image

சமூக ஊடக தளமான X-ஐ வெறும் தகவல் பரிமாற்ற தளமாக அல்லாமல், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கும் 'எல்லாவற்றிற்குமான செயலி' ஆக மாற்ற வேண்டும் என்பது எலான் மஸ்க்கின் நீண்டகால இலக்காக இருந்து வருகிறது. அந்த இலக்கை நோக்கி முக்கிய முன்னேற்றமாக, X Money என்ற வங்கிச் சேவையை அமெரிக்காவில் பிரீமியம் மற்றும் பிரீமியம்+ சந்தாதாரர்களுக்காக X அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உயர்மட்ட பயனர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்ட இந்தச் சேவை, தற்போது அனைத்து கட்டணச் சந்தாதாரர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

X Money மூலம் பயனர்கள் செயலியை விட்டு வெளியேறாமல் வைப்புத்தொகைகளை வைத்திருக்கவும், பிற பயனர்களுக்கு பணம் அனுப்பவும், கட்டணங்களைச் செலுத்தவும், வங்கிப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும், காசோலைகளை அஞ்சல் மூலம் அனுப்பவும் முடியும். சமூக ஊடக தளத்திலேயே முழுமையான நிதிச் சேவைகளை வழங்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

பயனர்களின் வைப்புத்தொகைகள் நியூ ஜெர்சியைத் தலைமையிடமாகக் கொண்ட Cross River Bank-இல் வைக்கப்படுகின்றன. இந்த வைப்புகளுக்கு அமெரிக்காவின் Federal Deposit Insurance Corporation (FDIC) மூலம் 250,000 டாலர் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும், வைப்புத்தொகைகளுக்கு ஆண்டுக்கு 6 சதவிகிதம் வரை வருமானம் வழங்கப்படும் என்றும் X Money தெரிவித்துள்ளது. பிரீமியம்+ சந்தாதாரர்கள் நேரடியாக அதிகபட்ச வட்டி விகிதத்தைப் பெற முடியும். அதேவேளையில், பிரீமியம் பயனர்கள் குறிப்பிட்ட நேரடி வைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னரே அந்தச் சலுகையைப் பெற முடியும்.

சீனாவின் WeChat செயலியைப் போன்று தகவல் பரிமாற்றம், பொருள்கள் வாங்குதல், பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்கும் செயலியாக X-ஐ மாற்ற வேண்டும் என்பதே மஸ்க்கின் நோக்கமாகும். PayPal-இன் Venmo, Block நிறுவனத்தின் Cash App மற்றும் SoFi போன்ற டிஜிட்டல் கட்டணச் செயலிகளுடன் போட்டியிடும் வகையில் X Money வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

எனினும், இந்தச் சேவை அமெரிக்க ஒழுங்குமுறை அமைப்புகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்க செனட் வங்கிக் குழுவின் மூத்த உறுப்பினரான செனட்டர் எலிசபெத் வாரன், வைப்புகளுக்கு 6 சதவிகிதம் வருமானம் வழங்கும் அளவுக்கு X Money எவ்வாறு வருவாய் ஈட்டும் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். மேலும், Cross River Bank நிறுவனத்திற்கு எதிராக FDIC கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வங்கிச் சேவை அறிமுகம், மஸ்க் கற்பனை செய்யும் எதிர்கால டிஜிட்டல் உலகத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை முழுமையாக மாற்றப்போகிறது என்ற தனது பார்வையை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

AI மூலம் மனிதர்கள் பயன்படுத்தக்கூடியதை விட அதிக அளவில் பொருள்கள் மற்றும் சேவைகள் உற்பத்தி செய்யப்படும் நிலை உருவானால், 2036-ஆம் ஆண்டிற்குள் பணத்தின் முக்கியத்துவம் பெருமளவில் குறைந்துவிடக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

பொருள்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்காகத்தான் பணம் தேவைப்படுகிறது. ஆனால், மனிதர்கள் பயன்படுத்தக்கூடியதை விட அதிகமாக AI மற்றும் ரோபோக்கள் உற்பத்தி செய்தால், உலகில் பணத்தின் தேவை வேலைவாய்ப்பை இழக்கும் மக்களுக்கு உலகளாவிய அடிப்படை வருமானம் (Universal Basic Income) வழங்குவது அல்லது அதிக வருமானம் மற்றும் மூலதனத்தின் மீது கூடுதல் வரி விதித்து செல்வத்தை மறுபகிர்வு செய்வது போன்ற நடவடிக்கைகள் தேவைப்படுமா என்ற கேள்விக்கு,

பதிலளித்த மஸ்க், அரசாங்கங்கள் எதிர்காலத்தில் குடிமக்களுக்கு நேரடியாக நிதியுதவி வழங்கும் சூழல் உருவாகலாம் என்றார். மேலும், AI சார்ந்த பொருளாதாரத்தில் பாரம்பர்ய பொருளாதாரக் கோட்பாடுகள் முழுமையாகப் பொருந்தாது என்றும் அவர் வாதிட்டார்.

பணப்புழக்கத்தை விட பொருள்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மிக வேகமாக அதிகரித்தால், உலகம் பணவீக்கத்தை (Inflation) அல்ல, பணவாட்டத்தையே (Deflation) சந்திக்கும் என்று மஸ்க் தெரிவித்தார். "எதிர்காலத்தில் பணவீக்கம் அல்ல, பணவாட்டம்தான் முக்கிய சவாலாக இருக்கும்," என்றும் அவர் கூறினார்.

அதேநேரத்தில், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அரசியல் மற்றும் சமூக ரீதியாக பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் மஸ்க் ஒப்புக்கொண்டார். "AI எனக்கு ஒரே நேரத்தில் உற்சாகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் அது மனிதகுலத்தின் மிகப்பெரிய முன்னேற்றமாகத் தோன்றுகிறது; சில நேரங்களில் அதன் விளைவுகள் குறித்து பயமாகவும் இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.

X Money மூலம் நிதிச் சேவைகளையும், AI மூலம் எதிர்கால பொருளாதாரக் கண்ணோட்டத்தையும் முன்வைக்கும் எலான் மஸ்க், தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்வியலையும், பொருளாதார அமைப்பையும் அடிப்படையாக மாற்றப்போகிறது என்ற தனது பார்வையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஆகாயத் தாமரையிலிருந்து பேப்பர்... ஐ.நா சபை வரை அசத்தும் தமிழ்ப் பெண் சுஷ்மிதா கிருஷ்ணன்!

சுஷ்மிதா கிருஷ்ணன்நம் நாட்டை விட்டுப் போகும் போது, ஆங்கிலேயர், நிலத்தில் பார்த்தீனியத்தையும், நீரில் ஆகாயத் தாமரையையும் விட்டுச் சென்றதாக ஒரு சொல்வழக்கு உள்ளது. காரணம், இவை இரண்டும் மிக விரைவாகப் பரவக... மேலும் பார்க்க

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றம்: ரூ.299 பிளான் ரத்து; பயனர்களுக்கு கூடுதல் செலவு!

இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களை உயர் மதிப்புள்ள திட்டங்களுக்கு மாற்றும் நோக்கில் பல பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களை அதிரடியாக நீக்கியுள்ளது. நேரடியாகக் கட்டண உயர்வ... மேலும் பார்க்க

ஸ்டைலான டிசைன்; ஸ்மார்ட்டான கேமரா... அசத்தலான AI அம்சங்கள் - அறிமுகமான vivo S2!

ஸ்டைல், கேமரா, பெர்ஃபார்மென்ஸ் என இன்றைய இளம் தலைமுறையினரின் ஸ்மார்ட்போன் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்து, vivo நிறுவனம் தனது S Series-ன் புதிய மாடலான vivo S2 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியு... மேலும் பார்க்க

`கையில் ரூ.1.87 லட்சம்; 6 நண்பர்கள்; ஒரு மாடி அறை'- HCL நிறுவனம் உருவான கதையை பகிர்ந்த அஜய் சௌத்ரி!

'ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட்' (HCL) நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அதன் இணை நிறுவனர் அஜய் சௌத்ரி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் நிறுவனத்தின் ஆரம்பக்கால நினைவுகளைப் பகிர்ந்தி... மேலும் பார்க்க

Meta AI glasses: நாளைய தொழில்நுட்பமா... தனியுரிமைப் பிரச்னையா? விடை தேடுமா உலக நாடுகள்?

Meta உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள AI Smart Glasses (செயற்கை நுண்ணறிவு கண்ணாடிகள்) உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் அதேவேளையில், பொதுமக்களின் தனியுரிமை, ப... மேலும் பார்க்க

YouTube Monetization : புதிய செக் வைக்கும் யூடியூப் - யூட்யூபர்ஸ் அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள்!

யூடியூப் நிறுவனம் தனது கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு YouTube Partner Program தகுதி விதிகளில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. பிப்ரவரி 1, 2027 முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய விதிகளின்படி, வி... மேலும் பார்க்க