செய்திகள் :

எல் மென்ச்சோ: `காதலால் வீழ்ந்த மெக்சிக்கோ போதைப் பொருள் கடத்தல் மன்னன்' - காட்டிக்கொடுத்த காதலி

post image

மெக்சிக்கோவில் அமெரிக்காவில் தேடப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மென்ச்சோ இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவ நடவடிக்கையில் படுகொலை செய்யப்பட்டார்.

இப்படுகொலையை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. எல் மென்ச்சோ கூட்டாளிகள் விமான நிலையம் உட்பட முக்கிய இடங்களில் புகுந்து தாக்குதல் நடத்தினர். எப்போதும் பலத்த பாதுகாப்புடன் இருக்கும் எல் மென்ச்சோ எப்படி ராணுவத்தின் பார்வையில் சிக்கினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அங்குள்ள ஜாலிஸ்கோ மாகாணத்தில் இருக்கும் தபல்பா என்ற இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்து தாக்கியதில், எல் மென்ச்சோ படுகாயம் அடைந்தார். தொடர்ந்து ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் அவர் இறந்துவிட்டார். இந்த ராணுவ நடவடிக்கையில் மேலும் 70 பேர் உயிரிழந்தனர்.

காதலியுடன் எல் மென்ச்சோ

அமெரிக்கா எல் மென்ச்சோவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மெக்சிக்கோ அரசை தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வந்தது. அதோடு மெக்சிக்கோ நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நாங்களே களத்தில் இறங்குவோம் என அமெரிக்கா எச்சரிக்கை செய்தது.

இதையடுத்து எல் மென்ச்சோவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு மெக்சிக்கோ தள்ளப்பட்டது. எனவே எல் மென்ச்சோவின் நடவடிக்கையை மெக்சிக்கோவும், அமெரிக்காவும் தீவிரமாக கண்காணித்து வந்தன. அவன் எங்கு இருக்கிறான் என்பது மர்மமாக இருந்தது. இதையடுத்து எல் மென்ச்சோவின் காதலி ஒருவரை ராணுவத்தினர் கண்காணித்து வந்தனர். இறுதியில் அப்பெண்ணை பிடித்து அவரை பலத்த பாதுகாப்புடன் எல் மென்ச்சோவின் மலை நகரமான தபல்பாவிற்கு அனுப்பி வைத்தனர்.

அப்பெண் எல் மென்ச்சோவை சந்தித்து பேசிவிட்டு அடுத்த நாள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் சென்ற பிறகு எல் மென்ச்சோ அங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்க உளவுத்துறையும் இது தொடர்பாக முக்கிய தகவல்களை கொடுத்தது. அதனை தொடர்ந்தே தபல்பா நகரை சுற்றி ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். கூடுதல் ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். அதோடு 6 ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. மெக்சிக்கோ விமான படையும் தேவையான உதவிகளை செய்தது.

ராணுவத்தினர் நகருக்குள் முன்னேற தொடங்கியதும், அதனை எதிர்த்து எல் மென்ச்சோவின் ஆட்கள் துப்பாக்கியால் சுட்டு தடுத்து நிறுத்த முயன்றனர். அதே நேரத்தில் எல் மென்ச்சோ இரண்டு மெய்க்காப்பாளர்களுடன் காடுகளுக்குள் தப்பி ஓட முயன்றார். இறுதியில் எல் மென்ச்சோ காட்டின் ஒரு தாழ்வான பகுதியில் மறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராணுவத்தினர் அவரது அடியாட்களுடன் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். எல் மென்ச்சோ படுகாயம் அடைந்தான். எல் மென்ச்சோ ஆட்கள் ஹெலிகாப்டர்களையும் துப்பாக்கியால் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து ஒரு ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது.

இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலர் காயம் அடைந்தனர். இதில் எல் மென்ச்சோ இறந்தவுடன் பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கினர். எங்கும் வன்முறையாக இருந்தது. பஸ்களுக்கு தீவைக்கப்பட்டது.

59 வயதாகும் எல் மென்ச்சோ 1990களில் ஹெராயின் கடத்தியதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு மெக்சிக்கோவிற்கு நாடு கடத்தப்பட்டார். மெக்சிக்கோவிற்கு வந்தவுடன் மீண்டும் தனது கிரிமினல் நடவடிக்கையை எல் மென்ச்சோ தீவிரப்படுத்தினார். அதோடு 2009 ஆம் ஆண்டில் CJNG என்ற அமைப்பை நிறுவினார், இது மெக்சிகோவின் வேகமாக விரிவடையும் கேங்காக வளர்ந்தது. கோகையின், மெத்தாம்பேட்டமைன், ஃபெண்டானில் கடத்தலில் ஈடுபட்டனர். இது தவிர அமெரிக்காவிற்கு செல்ல நினைப்பவர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு அனுப்பும் வேலையிலும் ஈடுபட்டனர்.

ஏழை பெண்களே குறி; ஆடம்பர வாழ்க்கை ஆசை - பாலியல் வதை.. மதமாற்றம்? - சிக்கிய சகோதரிகளின் பகீர் பின்னணி

மத்திய பிரதேச மாநிலம், போபாலைச் சேர்ந்த 21 மற்றும் 32 வயது பெண்கள் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், தங்களை சகோதரிகள் இரண்டு பேர் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளனர். அதோடு தாங்கள் வேல... மேலும் பார்க்க

நீட் தேர்வு எழுதக் கட்டாயப்படுத்திய தந்தை; கொன்று உடலைத் துண்டுத் துண்டாக்கிய மகன் சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் மன்வேந்திர சிங் (49). தொழிலதிபரான இவரது மகன் அக்‌ஷத் பிரதாப் சிங்(21). மன்வேந்திர சிங் தனது மகனிடம் மருத்துவம் படிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்காக நீட் தே... மேலும் பார்க்க

நெல்லை: திருமணம் மீறிய உறவு; பத்திரப்பதிவு எழுத்தர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கரம்!

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள ஆணையப்பபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர், மூலைக்கரைப்பட்டியில் பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வந்தார். கருத்துவேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளைப... மேலும் பார்க்க

ஒரு தலை காதல்; வீடு புகுந்து இரட்டை கொலை செய்த இளைஞர் - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம், நெகமம் அருகே உள்ளகொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. மெக்கானிக் வேலை செய்கிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவியும்,18 வயது மற்றும் 16 வயதில் 2 மகள்கள் உள்ளனர். நேற்று இரவ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மாணவரை சாதி ரீதியாக தாக்கிய 5 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், முதலூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி ... மேலும் பார்க்க

கூல்டிரிங்க்ஸ் குடிப்பது போல் வந்து குழந்தையை கடத்திச் சென்ற தம்பதி - 20 நிமிடங்களில் மீட்ட போலீஸார்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி, முத்துச்செல்வி. இத்தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் கூல்ட்ரிங்ஸ் கடை நடத்தி வருகின்றனர்.... மேலும் பார்க்க