செய்திகள் :

ஏஐ மாநாட்டில் சீன நாய் ரோபோ; வைரலான பேராசிரியர்; மன்னிப்புக் கேட்ட பல்கலைக்கழகம்; என்ன நடந்தது?

post image

டெல்லியில் சர்வதேச ஏ.ஐ. மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஐ.டி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கடைகளை அமைத்து அதில் தங்களது தயாரிப்புகளை கண்காட்சிக்கு வைத்துள்ளன.

இதில் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கால்கோட்டியாஸ் பல்கலைக்கழகமும் ஒரு கடையைத் திறந்து அதில் தங்களது தயாரிப்பு எனக் கூறி சிலவற்றை காட்சிக்கு வைத்திருந்தது.

இதில் ரோபோ நாய் ஒன்றும் இருந்தது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் நேஹா சிங் தூர்தர்சனுக்கு அளித்த பேட்டியில், '''ஓரியன்' என்று பெயரிடப்பட்ட அந்த ரோபோ நாய் பல்கலைக்கழகத்தின் சிறப்பு மையத்தால் (Centre of Excellence) உருவாக்கப்பட்டது. இந்த ரோபோ மிகவும் "குறும்புத்தனம்" (naughty) மிக்கது. கண்காணிப்புப் பணிகளைத் திறம்படச் செய்யும்'' என்று விவரித்தார்.

மேலும், ''செயற்கை நுண்ணறிவுத் துறையில் (AI) 350 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யும் முதல் தனியார் பல்கலைக்கழகம் நாங்கள்தான்" என்று அவர் குறிப்பிட்டார்.

தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் நேஹா சிங்
தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் நேஹா சிங்

ஆனால் அந்த ரோபோ நாயைப் பார்த்த பலரும் இது சீன தயாரிப்பு என்பதைக் கண்டுபிடித்தனர். சமூக வலைத்தளப் பயனர்கள் அந்த ரோபோ நாய், சீனாவின் யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Unitree Go2 என்ற வணிகரீதியிலான தயாரிக்கப்பட்ட ரோபோ நாய் என்பதைக் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக சமூக வலைத்தளப் பயனர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

சீனாவின் தயாரிப்பான அந்த ரோபோ நாய் பொதுவாக ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதையடுத்து மாநாட்டு அமைப்பாளர்கள் உடனே சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஸ்டாலை அகற்றும்படி உத்தரவிட்டனர்.

அதோடு அக்கடைக்கான மின்சார இணைப்பையும் துண்டித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அப்பல்கலைக்கழகம் வெளியிட்ட முறையான மன்னிப்பு கடிதத்தில், கண்காட்சி அரங்கில் (pavilion) இருந்த பிரதிநிதிகளில் ஒருவரான பேராசிரியர் நேஹா சிங், அந்தப் பொருளின் தொழில்நுட்பப் பின்னணி குறித்து சரியான தகவல் தெரியாதவர் என்றும், ஊடகங்களிடம் பேச அவருக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்றும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

நேஹா சிங்
நேஹா சிங்

மேலும் கேமரா முன் பேசுவதில் அவருக்கு இருந்த மிகுந்த உற்சாகம் காரணமாகவே அவர் தவறான தகவல்களைத் தந்துவிட்டதாக பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்த நேஹா சிங், தன் தரப்பில் தகவல் தொடர்பில் சிறு குறைபாடு இருந்திருக்கலாம் என்று ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், தனது கருத்தில் உள்நோக்கம் ஏதுமில்லை என்று விளக்கமளித்துள்ளார். கண்காட்சியில் இடம் பெற்ற சீன நாய் ரூ.2-3 லட்சத்தில் ஆன்லைனில் கிடைக்கிறது. இச்சம்பவத்தால் நொய்டா பல்கலைக்கழகத்திற்குத் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது.

"பிள்ளைகளின் படிப்புக்காகத்தான்" - மணியடித்தவுடன் மொபைல், டிவி ஆஃப்; வைரலாகும் மகாராஷ்டிரக் கிராமம்!

மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு சிறார்கள் அனைவரின் கையிலும் மொபைல் போனைப் பார்க்க முடிகிறது. இதனால் அவர்களது படிப்புக்கு மொபைல் போன்கள் தடையாக இருக்கின்றன.போன் பார்க்காமல் குழந்தைகள் படித்து... மேலும் பார்க்க

விஐடி பல்கலைக்கழகத்தில் ஜிஎஸ்டி வரி விழிப்புணர்வு மாநாடு!

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் வேலூர் கிளை சார்பில், “ஜிஎஸ்டி விதிமுறைகளை கையாளுதல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்ட... மேலும் பார்க்க

சிதைந்த மில்லியன் டாலர் கனவு; ரீல்ஸ் மோகத்தில் கார் ஏற்றிக் கொன்ற சிறுவன்; தாயின் தீராத வேதனை!

டெல்லி துவாரகா பகுதியில் நடந்த கோரமான கார் விபத்து, ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சிதைத்துள்ளது. 23 வயதான சாஹில் தனேஸ்ராஎன்ற இளைஞர், சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த ஸ்கார்பியோ கார் மோதி உயிரி... மேலும் பார்க்க

தட்டில் முடி இருந்தது உண்மைதான்... ஆனா போட்டது யாரு? கேமராவைத் திருப்பிய ஹோட்டல்: Trending video

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற 'தி ராக்ஸ்' பகுதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு உணவகத்தில், கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு மோசடி அரங்கேறியுள்ளது. ஒரு நபர் தனது குடும்பத்தினருடன் அந்த உணவக... மேலும் பார்க்க

திடீரென வீலிங் செய்த இளைஞர்; நிலைதடுமாறிய பின்னால் அமர்ந்திருந்த பெண்.. விபரீதத்தில் முடிந்த சாகசம்!

மும்பையின் பிரதான சாலையில் வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை இரு சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு, மிதமான வேகத்தில் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். இதனால் பின்னால் இருந்த பெண்ணும் எந்தவித முன்னெச்சரிகையும்... மேலும் பார்க்க

24வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள்: மாற்றத்தை உருவாக்கிய 5 மாற்று திறனாளி சாதனையாளர்களுக்கு கௌரவம்!

தடைகளைத் தாண்டி மாற்றத்தை ஊக்குவிக்கும் கதைகளை கொண்டாடும் வகையில்,கவின்கேர்நிறுவனம்எபிலிட்டி ஃபவுண்டேஷனுடன்இணைந்து24வதுகவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2026விழாவை ஏற்பாடு செய்தது. நாடு முழுவதும் பல்வேறு ... மேலும் பார்க்க