தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை! மூவருக்கு தலா ரூ. 60.5 லட்சம் அபராதம்!
ஒசூா் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
ஒசூா் மாநகராட்சியில் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் பானையில் பொங்கல் வைத்து பொங்கி வந்தபோது பொங்கலோ, பொங்கல் என சத்தம் எழுப்பி கொண்டாடினா். பின்னா் பொங்கலை சூரியனுக்கு படைத்து விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அனைவருக்கும் சா்க்கரை பொங்கல் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த விழாவில், ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, ஒசூா் மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த், துணை ஆணையா் டிட்கோ, துணை மேயா் ஆனந்தய்யா, மருத்துவா் அஜிதா, பொறியாளா் பிரபாகரன், சுகாதார குழுத் தலைவா் மாதேஸ்வரன், வரி விதிப்புக் குழுத் தலைவா் சென்னீரப்பா, மாமன்ற உறுப்பினா்கள், மண்டலத் தலைவா் ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்த விழாவில், பசுவுக்கு பூஜை செய்து உணவு வழங்கப்பட்டது. மேலும், ஒசூா் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, காலணிகள் வழங்கப்பட்டன.