செய்திகள் :

"ஒயின் ஷாப்களின் எண்ணிக்கையை இன்னும் கொஞ்சம் அதிகமாக்க வேண்டும்!" - கஞ்சா கருப்பு சர்ச்சை பேச்சு

post image

நடிகர் ரவி மரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'மக்கள் தலைவா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.

ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

'மக்கள் தலைவா' திரைப்படம்
'மக்கள் தலைவா' திரைப்படம்

இந்த நிகழ்வில் நடிகர் கஞ்சா கருப்பு பேசிய விஷயம், சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கஞ்சா கருப்பு பேசுகையில், "இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர், கவிதாலயா சரவணன் அண்ணன் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அவர் தேனியின் மன்னன். சினிமா உலகின் கடவுளைப் போன்றவர்.

இந்தப் படத்தின் இயக்குநர் ராம்தேவுக்கு ஒரு தேவை என்றால் அதிகாலை மூன்று மணிக்குத் போன் செய்து பேசுவார். ஒருமுறை அதிகாலை 4 மணிக்கு படப்பிடிப்பிற்கு வரச் சொன்னார். நானும் நான்கு மணிக்கு அவர் சொன்ன ஒயின் ஷாப்பிற்குச் சென்றேன். கதவு மூடி இருந்தது. யாரும் அங்கு வரவில்லை.

நான் சென்று கடை கதவைத் தட்டியதும் உள்ளே இருந்து ஒருவர் எட்டிப் பார்த்தார். அவர் இன்று பிளாக்கில் சரக்கு கிடைக்காது என்றார். அவரிடம், 'நான் சரக்கு வாங்க வரவில்லை. நடிக்க வந்திருக்கிறேன்.இயக்குநர் இங்குதான் வரச் சொன்னார்' என்றேன்.

கஞ்சா கருப்பு
கஞ்சா கருப்பு

அதன் பிறகு புரொடக்ஷன் நபர் எனக்குப் போன் செய்து வந்துவிடுகிறேன் என்றார். இன்னொரு முக்கியமான விஷயம், தற்போது இரவு 9:45 மணிக்கே கடைகளை முழுமையாக மூடிவிடுகிறார்கள்.

இந்த ஆட்சியில் மதுக்கடைகளை இரவு 12 மணி வரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதேபோல் காலையில் 7 மணிக்கே திறந்துவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

ஆங்காங்கே ஒயின் ஷாப்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. எனவே, கடைகளின் எண்ணிக்கையை இன்னும் கொஞ்சம் அதிகமாக்க வேண்டும்." எனப் பேசியிருக்கிறார்.

Jayaram: "அப்போ நான் அவர்கிட்ட போய் மன்னிப்புக் கேட்டேன்'' - தன் காதல் கதையைப் பகிர்ந்த ஜெயராம்

நடிகர் ஜெயராம் நடிப்பில் கடந்த வாரம் 'பரிமளா & கோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அப்படத்திற்காக நம் சினிமா விகடன் சேனல் நடத்திய பிரத்யேக 'விகடன் பிரஸ் மீட்' நிகழ்வில் ஜெயராம் கலந்துகொண்டு ... மேலும் பார்க்க

Nooru Saami: "பசியோட இருக்காத, பண உதவி பண்றேன்னு..." - ஏ.ஆர். முருகதாஸ்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Nooru Saami: "'உன்னை பார்க்கும்போது ரவுடி மாதிரி தெரிஞ்ச'னு சசி சார் சொன்னார்!" - பா. ரஞ்சித்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Double Occupancy Review: 6-6 ஆண்; 6-6 பெண் சுவாரஸ்யமான ஒன்லைன் - படமாக பாஸாகிறதா?

பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறது ஒரு தம்பதி (போஸ் வெங்கட் - வினோதினி). கடவுளை நம்பாத போஸ் வெங்கட், கைகூப்பி கடவுளை வணங்கி வேண்டுகிறார். கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்... மேலும் பார்க்க

Habeebi Review: தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை; ஆனால், படமாகக் கவர்கிறதா?

தென் தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழிலை யூசுஃப் கானின் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கவனித்து வருகிறார்கள். கைத்தறித் தொழில் நலிவடைந்து வருவதால், யூசுஃப் கானின் தம்பி வளைகுடா நாட்டிற்குப் பணிக்க... மேலும் பார்க்க

Bharathiraja: "துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி" - பாரதிராஜா மனைவி சந்திர லீலா

இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று முன்தினம் (ஜீன்.10) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலைய... மேலும் பார்க்க