செய்திகள் :

"ஒரு தாயிடம் ஒருபோதும் விளையாடாதீர்கள்" - மகள்கள் மீதான உருவக்கேலிக்கு குஷ்பு பதிலடி

post image

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்புவின் மகள்கள் உருவக்கேலியைச் சந்தித்து வந்த நிலையில் குஷ்பு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இதுதான் என் குடும்பம். அன்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதலால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் இன்று இருக்கும் இந்த நிலையை அடைவதற்கு எங்களது எலும்புகள் தேய உழைத்திருக்கிறோம்.

குஷ்புவின் குடும்பம்
குஷ்புவின் குடும்பம்

இரத்தமும் வியர்வையும் சிந்திப் போராடியிருக்கிறோம். சில நேரங்களில் நாங்கள் தடுமாறி, தோல்வியடைந்து, கீழே விழுந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் இரட்டிப்பு வேகத்துடன் எழுந்து நின்று வெற்றி பெற நாங்கள் தவறியதே இல்லை.

எங்களது பிள்ளைகளை நாங்கள் மிகுந்த கவனத்துடன் வளர்த்துள்ளோம். அவர்கள் தங்களது வெற்றியைக் கண்டு தலைக்கனம் கொள்ளவோ, அல்லது பிரபலங்களின் பிள்ளைகள் என்ற தகுதியைத் தவறாகப் பயன்படுத்தவோ நாங்கள் ஒருபோதும் அனுமதித்ததில்லை.

அவர்களும் தங்களது அடையாளத்தை எதற்கும் தவறாகப் பயன்படுத்தியதே இல்லை. எங்களது பிள்ளைகளை நினைத்து நாங்கள் மட்டற்ற பெருமிதம் கொள்கிறோம்.

ஒரு தாயாக, யாரோ ஒரு முன்பின் தெரியாத நபர், இரண்டு நிமிட மலிவான விளம்பரத்திற்காக என் பிள்ளைகளை அவமதிப்பதையோ, அவதூறு பரப்புவதையோ அல்லது பயன்படுத்துவதையோ என்னால் சகித்துக்கொள்ள முடியாது, அனுமதிக்கவும் மாட்டேன். அவர்களின் மனநிலை மிகவும் தரமற்றது, அநாகரிகமானது. அது அவர்களின் வளர்ப்பையே காட்டுகிறது.

அவர்கள் பேசும் அதே பாணியிலும் மொழியிலும் என்னால் அவர்களுக்குப் பதிலடி கொடுக்க முடியும், ஆனால் நான் அதைச் செய்ய மாட்டேன். அப்படிச் செய்தால் அது என் தாய்க்கும், அவர் எனக்குக் கற்றுக் கொடுத்த வளர்ப்பிற்கும் நான் செய்யும் துரோகமாகிவிடும்.

அனந்திதா சுந்தர்
அனந்திதா சுந்தர்

ஆனால், நான் அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக, உங்கள் அழுக்கு பிடித்த, கேவலமான மனநிலையை நான் ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு தாயிடம் ஒருபோதும் விளையாடாதீர்கள். தன் குட்டிகளைப் பாதுகாக்கப் பாய்ந்து குதறும் புலி மாதிரிதான் ஒரு தாய் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த எச்சரிக்கை, என் குடும்பத்தையும் பிள்ளைகளையும் பயன்படுத்தி ஃபாலோவர்ஸ்களையும், மலிவான கைத்தட்டல்களையும் பெற நினைக்கும் ஏதோ ஒரு தரம் குறைந்த நபருக்கு மட்டுமானது அல்ல. பணம் சம்பாதிப்பதற்காகவும், தங்கள் குடும்பத்தை நடத்துவதற்காகவும் எங்களைப் பற்றி அமர்ந்து பேசும் தங்களை 'யூடியூபர்கள்' என்று கூறிக்கொள்பவர்களுக்கான எச்சரிக்கையும்தான்.

பொறுத்தது போதும். இன்று நமக்காக நாம் குரல் எழுப்பவில்லை என்றால், இந்த முட்டாள்கள் நம் மீது ஏறி மிதிப்பார்கள். அவர்களுக்குத் தெரியாத ஒன்று இருக்கிறது. எங்களுக்குள் இருக்கும் வலிமை விலைக்கு வாங்கப்பட்டது அல்ல, அது எங்களின் உழைப்பால் சம்பாதிக்கப்பட்டது.

குஷ்பு
குஷ்பு

இங்குள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் நான் கூறுவது ஒன்றுதான். உங்களுக்காக நீங்கள் எழுந்து நில்லுங்கள். மற்றவர்கள் உங்களுக்கு மரியாதை தரத் தவறும்போது, அதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

முதலில் உங்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்களை அவமதிக்க மற்றவர்களை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். எப்போதும் ஒரு நல்ல தோழியாகவும், குடும்ப உறுப்பினராகவும் என்னுடன் நிற்கும் ராதிகா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று பதிவிட்டிருக்கிறார்.

ஜானகி மறைவு: "சொந்த வாழ்வில் எத்தனையோ துக்கங்களைத் தாங்கியிருக்கிறார்..." - இளையராஜா இரங்கல்

பின்னணி பாடகி ஜானகியின் மறைவிற்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளர் இளையராஜா ஜானகியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியி... மேலும் பார்க்க

Anbe Diana:``'பெரம்பூர்' சுற்றுலாத் தலம் போல மக்களின் கவனத்தை ஈர்க்கப்போகிறது" - நடிகர் சமுத்திரகனி

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க

"கேலி செய்வது கோழைத்தனம்" - குஷ்பு மகள்களுக்கு நடந்த உருவக்கேலிக்கு நடிகை ராதிகா கண்டனம்

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி ஆகியோரின் இரண்டாவது மகள் அனந்திதா. இயக்குநர் மணிரத்னத்திடம் 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப... மேலும் பார்க்க

Anbe Diana: ``'டைரக்ஷன் மட்டும் பண்ணுங்க; ஹீரோவா வேணாம்' என்றார்கள்; ஆனால்..." - பாரி இளவழகன்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தில், ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன் ஆகியோர... மேலும் பார்க்க

Anbe Diana:``ஒரு படைப்பாளியின் பாதையை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்" - சசிகுமார்

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க

Anbe Diana: ``டப்பிங் பேசும்போது எனக்கு கண்ணீர் வந்தது" - 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரோஜா!

'ஜமா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'குட் நைட்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லி... மேலும் பார்க்க