செய்திகள் :

ஒரே நாளில் 3 முறை பார்த்த 'கில்லி' மேஜிக்... இன்றும் பத்திரமாக இருக்கும் சிடி கேசட்!

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

 இளைய தளபதி அவர்கள் நடித்துள்ள எண்ணற்ற திரைப்படங்களை கண்டு களித்துள்ளேன், ரசித்துள்ளேன், (ரசிகன்,பிரண்ட்ஸ், துப்பாக்கி,திருப்பாச்சி, ஆதி, கில்லி,குருவி, பூவே உனக்காக போன்ற எண்ணற்ற திரைப்படங்கள் இதில் அடங்கும்.

 இதில் என் மனதை மிகவும் கவர்ந்த திரைப்படம் என்றால் அது கில்லி திரைப்படம். இத்திரைப்படத்தில் இளைய தளபதி விஜய் அவர்களும், நடிகை திரிஷா அவர்களும் இணைந்து நடித்திருப்பார்கள். இத்திரைப்படத்தில் இளைய தளபதி விஜய் அவர்களின் கதாபாத்திர பெயர் *வேலு* திரிஷா அவர்களின் கதாபாத்திர பெயர் தனலெட்சுமி.

விஜய் அவர்கள் ஒரு கபடி வீரர் ஆவார். தளபதி அவர்கள், முத்துப்பாண்டியிடமிருந்து, தனலெட்சுமியை காப்பாற்றி, தன் சொந்த வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைத்து  வைத்து, பாதுகாத்து, அமெரிக்கா செல்ல உதவி செய்வார் பாருங்க, மதுரையில் இருந்து, சென்னை வரை தனலெட்சுமியை காப்பாற்ற அவர் பட்ட கஸ்டங்களை வார்த்தையால் சொல்ல இயலாது, அப்பப்பா, எவ்வளவு கஸ்டங்கள், இன்றும் இந்த முழு திரைப்படம் என் கண் முன்னே நிற்கின்ற என் மனதை மிகவும் கவர்ந்த திரைப்படம் ஆகும்.

கில்லி

கூடுதல் தகவலாக ஒன்றை நான் பதிவிட்டே ஆக வேண்டும். கில்லி திரைப்பட CD Cassette  வாங்கி வந்து வீட்டில் நான் பிள்ளைகள் அனைவரும் குடும்பமாக பார்த்து ரசித்து மகிழ்ந்த நாட்கள் ஏராளம். அதிலும் விடுமுறை தினமானால் ஒரே நாளில் மூன்று முறையெல்லாம் திரும்ப, திரும்ப பார்த்து மகிழ்ந்துள்ளோம். இது 100% உண்மை. நாங்கள் பார்த்து மகிழ்ந்த CD Cassette. -ஐ ஆவணப்படுத்தி புகைப்படமாக இந்த கட்டுரையுடன் இணைத்துள்ளேன்.

1996- ஆம் ஆண்டு, நான் எனது குடும்பத்துடன் கோவை , ஆவாரம் பாளையம் என்ற ஊரில் வசித்து வந்தேன். கோவை KG -தியேட்டரில் இளைய தளபதி விஜய் அவர்கள் நடித்த பூவே உனக்காக திரைப்படம் ஓடிக்கொண்டு இருந்தது.

பூவே உனக்காக விஜய்

என் கணவருக்கு தொடர் பணியின் காரணமாக எங்களால் படம் திரைக்கு வந்தவுடனே சென்று பார்க்க இயலவில்லை. அன்று கடைசி நாள், எப்படியாவது படம் பார்த்து விட வேண்டும் என்று அடித்து, பிடித்து தியேட்டருக்கு சென்று விட்டோம், கூட்டம் அலைமோதியது, என்ன செய்வதென்று புரியாமல் நின்ற நிலையில், என்னை ஓரமாக நில் என்று கூறி பாதுகாப்பாக ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு, கூட்டத்திற்குள் முண்டியடித்து சென்று விட்டார், என் கணவர், சென்றவர், இரண்டு டிக்கெட்டுடன் வந்தார், ஆனால் அவரது காலில் போட்டிருந்த ஒரு செருப்பு கூட்டத்திற்குள் முண்டியடித்து, நுழைந்ததில் அறுந்துவிட்டது, அறுந்த செருப்பை பேப்பரில் வைத்து, பையில் வைத்துக் கொண்டு, படம் பார்த்து விட்டு வீடு திரும்பினோம், என் கணவர் செருப்பில்லாமல், வெறும் காலுடன் தான் வீட்டிற்கு வந்தார், இருப்பினும் தளபதி அவர்களின் படம் பார்த்த சந்தோஷம் எங்களுக்கு. இன்றும் , என்னால் மறக்க இயலாத தியேட்டர் அனுபவங்கள் இது.

*நினைவின் மகிழ்வில்*

ச.சங்கீதா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

வானத்திலிருந்து குதித்தவர்கள் போல அலட்டிக்கொள்ளவில்லை! - ஷூட்டிங்கில் வியக்கவைத்த விஜய்யின் எளிமை!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் முகம் தேவையில்லை! - சாத்தூரிலிருந்து ஒரு ரசிகரின் பிறந்தநாள் மடல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணியின் எவர்கிரீன் நினைவலை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

``Please எனக்கு இப்படி பட்டம் கொடுத்துறாதீங்க: மன்னிப்பு கேட்டுக்கிறேன்" - நடிகர் மாஸ்டர் மகேந்திரன்

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அண்மையில் மின்வெட்டு தொடர்பாகவும், சோலார் பேனல் தொடர்பாகவும் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, ட்ரால் (Troll) செய்யப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த ... மேலும் பார்க்க

முகம் பார்க்கும் முன்னே ரசிகனான விசித்திரம்! - நெகிழ்ச்சிப் பகிர்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வெறும் பொழுதுபோக்கு அல்ல... ஒரு வரலாற்று ஆவணம்! - பாரதிராஜாவுக்கு இளம் வரலாற்று மாணவனின் அஞ்சலி