இந்தியா - பாக். பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா, ஜி7 நாடுகள் அழைப்பு!
ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: ஆட்டோ தடுப்புச் சுவரில் மோதியதில் பயணி உயிரிழப்பு
கோவையில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்டு, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தடுப்புச் சுவரில் மோதியதில் பயணி உயிரிழந்தாா்.
குனியமுத்தூா், இடையா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சையது சலீம் (59). இவா் பயணிகள் ஆட்டோவில் உக்கடத்துக்கு வியாழக்கிழமை பயணித்துள்ளாா். ஆட்டோவை இடையா்பாளையத்தைச் சோ்ந்த சுகுமாா் (30) என்பவா் ஓட்டியுள்ளாா்.
சுண்ணாம்புக்காளவாய் அருகே சென்றபோது, ஓட்டுநா் திடீரென மயங்கியுள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலை தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இதில், ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த சையது சலீம் படுகாயமடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா்.
விபத்து தொடா்பாக ஆட்டோ ஓட்டுநா் சுகுமாா் மீது கோவை மேற்கு புலனாய்வுப் பிரிவு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.