செய்திகள் :

'கண்ணியக்குறைவாக பேசுபவர்கள் நேரலையில் அம்பலப்படட்டுமே என மக்கள் கேட்கின்றனர்!' - சபாநாயகர் விளக்கம்

post image

சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின் இடையே பேசிய சபாநாயகர் 'சட்டமன்ற நேரலை' குறித்து விரிவாக பேசியிருந்தார்.

சபாநாயகர்
சபாநாயகர்

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், 'சட்டமன்றத்தில் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும் விஷயங்களை அவர்கள் ரீல்ஸாக போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை உரிமைக்குழு நடவடிக்கைக்கு எடுக்க வேண்டுமென கேட்டோம். ஆனால், இன்னும் உரிமைக்குழு அமைக்கப்படவில்லை. அதனால் பேரவைத் தலைவரே முடிவெடுக்க வேண்டும்' என்றார்.

இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர் பதிலளிக்கையில், 'செப்டம்பர் 8 ஆம் தேதி வரைதான் அவை இருக்கிறது. உரிமைக் குழு உட்பட எல்லா கமிட்டிக்கான தேர்தலும் இந்த வார இறுதியில் நடக்கும். அதன்பிறகு 'அவைக் குறிப்பு' விவகாரத்தை உரிமைக் குழு எடுத்துக் கொள்ளும். அவையில் இருந்து நீக்கப்படுபவை எல்லாம் ரீல்ஸாக வருகிறது என நீங்கள் வருந்துகிறீர்கள். ஆனால், நேற்று நான் ஒரு தனியார் நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் சென்றேன். அப்போது ஒரு இளைஞர் கூட்டம் என்னிடம் வந்து பேசினர்.

சபாநாயகர்
சபாநாயகர்

அவர்கள் பேசும் போது, 'சட்டமன்ற நேரலை எங்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. எங்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. எங்கள் குடும்பத்தில் யாரும் எம்.எல்.ஏ இல்லை, அமைச்சர் இல்லை. ஆனால், நேரலையை பார்த்து எங்களுக்கு அரசியலில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வம் வந்திருக்கிறது. நேரலை மற்றும் அவைக்குறிப்பு பற்றி பேசினீர்கள். நீங்கள் ஏன் உறுப்பினர்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்காதபடிக்கு கண்ணியத்தோடு பேச கற்றுக்கொடுக்கக் கூடாது?' என்றனர்.

இதையும் நான் மனதில் கொள்ள வேண்டும்.

பேசுகின்ற உறுப்பினர்கள் இந்த அவை மற்றும் வாக்காளர்களின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு பேசினால் இந்த பிரச்னையே எழாது. அதையும் மீறி பேசுபவர்கள் நேரலை மூலம் அம்பலப்பட்டால் என்ன? என்றும் மக்கள் கேட்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் பின்னர் உங்களிடம் நான் விரிவாக பேசுகிறேன்' என்றார்.

`பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்' அமைக்க வேண்டும்' - ஜக்கி வாசுதேவ்

நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நேற்று நடைபெற்ற ‘நேபாளத்திற்குத் துணை நிற்போம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜக்கி வாசுதேவ், “இந்தப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ ... மேலும் பார்க்க

அமெரிக்காவிற்கு ஜாக்பாட்: 'செலவே இல்லாமல் 6,500 கோடி பேரல் எண்ணெய்' வெனிசுலாவின் சூப்பர் பரிசு!

கடந்த ஜனவரி மாதம், வெனிசுலாவின் அப்போதைய அதிபர் மதுரோவைக் கைது செய்து, அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இந்தச் சம்பவத்திற்குப் பின், ட்ரம்பின் டார்கெட் முழுவதும் வெனிசுலாவின் ... மேலும் பார்க்க

TN Assembly : `110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்த 6 அறிவிப்புகள்!' - முழு விவரம்!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.CM Vijayமுதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள், 'கிராம அளவ... மேலும் பார்க்க

"முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது; ஆனால்..." - வைகோ என்ன சொல்கிறார்?

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்' எனத் தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். அ... மேலும் பார்க்க

DMK: "மனக்கசப்புடன் இனியும் திமுகவில் தொடர முடியாது" - தோப்பு வெங்கடாசலம் சொல்வது என்ன?

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், தி.மு.க- வின் முன்னாள் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளருமான தோப்பு வெங்கடாசலம், தி.மு.க- வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக இன்று (... மேலும் பார்க்க

``100 நாள்களில் ரூ.28,000 கோடி கடன்; விஜய்யின் தவெக அரசு நிலைக்காது!" - விளாசிய எடப்பாடி பழனிசாமி

வேலூரில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``த.வெ.க அமைச்சரவையில் பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒருத் துறை இருக... மேலும் பார்க்க