விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில...
கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷால் தம்பதிக்கு ஆண் குழந்தை! மகிழ்ச்சியுடன் பகிர்வு; குவியும் வாழ்த்துகள்
பாலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் ஜோடி டிசம்பர் 2021-ல் ராஜஸ்தானில் திருமணம் செய்தனர். இவர்கள் கர்ப்பம் குறித்து செய்தியை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டனர். முன்னதாக, ஜூலை மாதத்திலிருந்து கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வந்தன.
இந்த நிலையில் விக்கி கௌஷல்- கத்ரீனா கைஃப், தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர்.
கத்ரீனா கைஃப் இன்ஸ்டாகிராம் பதிவில், "மிகுந்த அன்புடனும் நன்றியுடனும், எங்கள் ஆண் குழந்தையை வரவேற்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை பகிர்ந்தவுடன், அவர்களது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

















