மகாராஷ்டிரா: ``எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும்?'' - அஜித...
Smriti Irani: `வட இந்திய சீரியலில் தோன்றும் பில் கேட்ஸ்' - Ex மத்திய அமைச்சர் அப்டேட்!
முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடிக்கும் 'Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2' என்ற சீரியலில் நன்கொடையாளரும், உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ் ஒரு சிறப்பு எபிசோடில் தோன்றவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

சீரியல் நடிகையாக இருந்து அரசியல் தலைவரானவர் ஸ்மிருதி இரானி. 25 ஆண்டுகளுக்கு முன் அவர் நடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற சீரியல் 'Kyunki Saas Bhi Kabhi Bahu Thi' இதன் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியைச் சந்தித்த இரானி சீரியல் மூலம் மக்களுடன் இணைந்திருக்க முடிவு செய்துள்ளார்.
பில் கேட்ஸ் வரும் தருணம் பொழுதுபோக்கு வரலாற்றில் முக்கியமானதாக இருக்கும் என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் ஸ்மிருதி இரானி. அந்த எபிசோடில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலன் குறித்து சமூகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான கருத்துகள் பேசப்படும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்தியா டுடே வலைதளம் கூறுவதன்படி, சீரியலில் பில் கேட்ஸ் ஸ்மிருதி இரானி நடிக்கும் துளசி விராணி கதாப்பாத்திரத்துடன் வீடியோ காலில் இணைந்து தாய் - சேய் நலன் குறித்து உரையாடவுள்ளார். பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் உலகளாவிய விழிப்புணர்வு முயற்சிகள் குறித்தும் பேசப்படவிருக்கிறது.
இந்த எபிசோட் குறித்த புரோமோவும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் பில் கேட்ஸ் குறித்து ரகசியம் காக்கப்பட்டிருக்கிறது.
Smriti Irani-ன் சீரியல் பயணம்
'Kyunki Saas Bhi Kabhi Bahu Thi' முதல் சீசன் சுமார் 8 ஆண்டுகள் 1800 எபிசோடுகள் ஓடியது. தற்போது ஒளிபரப்பாகும் இரண்டாம் சீசன், அதைவிட சிறியதாக ஆனால் சமூகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியாகிவருகிறது.
ஸ்மிருதி இரானியுடன் முதல் சீசனில் நடித்த அமர் உபாத்யாய், ஹிட்டன் தேஜ்வானி, கௌரி பிரதான், சக்தி ஆனந்த் மற்றும் கேட்கி டேவ் ஆகிய நடிகர்களும் சில புதிய நடிகர்களும் இரண்டாம் சீசனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



















