செய்திகள் :

"கம்ஃபோர்ட்டான இடத்தை விட்டு வெளியே வந்து புதிய விஷயங்களைச் செய்வதுதான் பிடிக்கும்" - ஜான்வி கபூர்

post image

ராம் சரண், ஜான்வி கபூர் இணைந்து நடித்திருக்கும் 'பெத்தி' திரைப்படம், ஜூன் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ராம் சரண் - பெத்தி திரைப்படம்
ராம் சரண் - பெத்தி திரைப்படம்

டோலிவுட்டில் 'உபெனா' படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். மேலும், ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரிலீஸையொட்டி படத்தின் ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஜான்வி கபூர் பேசுகையில், "ஒரு நடிகையாக எனக்கு சவால் விடும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் எப்போதும் ரசிப்பேன்.

நமக்கு பழகமில்லாத வித்தியாசமான கதாபாத்திரங்களில் சோதனை முயற்சிகளைச் செய்யும்போதுதான், அது நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், கரியர் வாழ்க்கையிலும் வளர்ச்சிக்கு உதவுகிறது.

இது எனக்குள் ஒரு பெரிய ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. என்னுடைய இந்த வேலையிலேயே எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், நம்முடைய கம்ஃபோர்ட் ஜோன் விட்டு வெளியே வந்து புதிய விஷயங்களை எக்ஸ்ப்ளோர் செய்வதுதான்.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

நாம் உண்மையில் யார் என்பதை நாம் தெரிந்துகொள்ளும் அந்தத் தருணத்தில்தான், ஒரு கலைஞராக நாம் இன்னும் வளர முடியும். திரைத்துறையில் இருக்கும் பிரஷர் குறித்து அதிகமாக யோசித்துக்கொண்டிருக்காமல், என்னுடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்த நான் விரும்புகிறேன்.

இதனை நான் ஒரு அழுத்தமாகப் பார்க்காமல், என்னுடைய பொறுப்பாகவே பார்க்கிறேன். ரசிகர்கள் நடிகர்களாகிய நமக்குக் கொடுக்கும் அன்பிற்கு நாம் எப்போதும் மதிப்பளிக்க வேண்டும்.

நாம் எந்தவொரு வேலையைச் செய்தாலும், நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் நம்முடைய மிகச் சிறந்த பங்களிப்பை அள்ளித் தருவது நம்முடைய கடமை" எனத் தெரிவித்திருக்கிறார்.

"தூக்கம் வராத நேரங்கள்ல எல்லாம் நான் ஒரு ஹாரர் படம் பார்ப்பேன்!" - பவன் கல்யாண் ஜாலி டாக்

ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும், தெங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான பவன் கல்யாண், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனக்குத் தூக்கம் வராத இரவுகளில் மனதை அமைதிப்படுத்த அவர் கையாளும் பழக்கம் குறித... மேலும் பார்க்க

"நடிகைகள் தங்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்" - 'பெத்தி' விவகாரம் குறித்து நித்யா மேனன்

ராம் சரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பெத்தி'. புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் ப... மேலும் பார்க்க

"சினிமாவில் பெண்களைக் காட்டும் விதம் கொடூரமானதாக இருக்கிறது" - 'பெத்தி' பட விவகாரம் குறித்து கங்கனா

ராம் சரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பெத்தி'. புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் ப... மேலும் பார்க்க

Maa Inti Bangaaram: "சாய் பல்லவியை மனதில் வைத்துதான் இந்தக் கதை உருவாக்கப்பட்டது!' - பகிரும் சமந்தா

சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான 'மா இண்டி பங்காரம்' ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் 'க... மேலும் பார்க்க

'பெத்தி' படத்தில் ஜான்வி கபூர் கதாபாத்திரம்: - பகிரங்க மன்னிப்பு கேட்ட இயக்குநர் புச்சி பாபு சனா!

ராம் சரண் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பெத்தி. புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் பு... மேலும் பார்க்க

Peddi Review: அடையாளத்துக்காகக் களமிறங்கும் விளையாட்டு வீரன் - படமாகக் கோப்பையை வென்றதா?

அரசாங்க ஏடுகளில் எந்தவித பெயர் கொண்டும் அச்சேறாமல் இருக்கும் தன்னுடைய மலைக் கிராமத்துக்கும், அதன் காரணமாக அடையாளமற்று, அடிப்படை வசதிகளற்றுக் கிடக்கிற தன் கிராம மக்களுக்கும் தன் விளையாட்டுத் திறமையால் ... மேலும் பார்க்க