செய்திகள் :

கலப்பட பால் குடித்த 4 பேர் உயிரிழப்பு... சிகிச்சையில் பலர் - ஆந்திராவில் அதிர்ச்சி!

post image

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு திடீரென குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. அதோடு சிறுநீர் வெளியேறுவதும் வெகுவாக குறைந்தது. இதனால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றனர். ஆனால் அவர்களில் வயதான 4 பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார்கள். மேலும் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கேள்விப்பட்டதும் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதியில் முகாமிட்டு நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அனூரியா பாதிப்பு

இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள், ``இது போன்ற பிரச்னைக்கு அனூரியா என்று சொல்வதுண்டு. அதாவது இப்பிரச்னை அசுத்தமான பால் காரணமாக வரக்கூடியது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீர் வெளியேறுவது வெகுவாக பாதிக்கப்படும். அல்லது சிறுநீரே வெளியேறாது. பொதுவாக பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 100 மில்லி மீட்டருக்கும் குறைவாக சிறுநீர் வெளியேறுவதை இவ்வாறு கூறுவதுண்டு" என்று தெரிவித்தனர்.

இது சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படவில்லை என்பதற்கான தீவிர அறிகுறியாகும். உடலில் உள்ள கழிவுப் பொருள்கள் மற்றும் அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுவதில் சிறுநீரகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை இந்த வேலையைச் செய்யத் தவறும்போது, ரத்த ஓட்டத்தில் நச்சுகள் விரைவாகச் சேரக்கூடும். இது மற்ற உறுப்புகளுக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுத்து, உயிருக்கு ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

சிறுநீரகங்கள் உயிர்வாழ மிக அவசியமானவை. அவை திடீரெனச் செயல்படுவதை நிறுத்தும்போது, சாதாரணமாகச் சிறுநீர் வழியாக வெளியேற்றப்பட வேண்டிய யூரியா மற்றும் கிரியேட்டினின் போன்ற கழிவுப் பொருள்கள் உடலில் தேங்குகின்றன. இது உடலில் அதிகப்படியான நீர் சேர்தல் (Fluid overload), வளர்சிதை மாற்றச் சமநிலையின்மை போன்ற பிரச்னையை உருவாக்குகின்றன. இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பல உறுப்புகள் செயலிழப்பது போன்ற அபாயகரமான நிலைகளுக்கு வழிவகுக்கும். பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஆய்வு செய்ததில் ரத்தத்தில் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவு அபாயகரமாக அதிகரித்துள்ளதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு `கவுரவ டாக்டர்' பட்டம்! - வழங்கியது தாய்லாந்து பல்கலைக்கழகம்

விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் அவர்களுக்கு தாய்லாந்தின் பாங்காங் நகரில் உள்ள ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் க்ருங்தெப் (RMUTK) “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கியுள்ளது.தாய்லாந்து நாட்டின் பிரி... மேலும் பார்க்க

"என்னைச் சுட வந்தவரைச் சுட்டுக்கொன்றேன்" - நேர்காணலில் மாஜி பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஒப்புதல்

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் பிரிஜ்பூஷன் சிங். பா.ஜ.க. முன்னாள் எம்.பியான இவர் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோது வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்... மேலும் பார்க்க

VIT CHENNAI : “எனக்கு ரோல்மாடல் என்னுடைய அம்மா தான்' - Vibrance 2026-ல் நடிகை ச்ரிலீலா

வி.ஐ.டி சென்னையில் `வைப்ரன்ஸ் 2026' என்ற சர்வதேச மாணவ மாணவியர் கலைத் திருவிழாவின் நிறைவு விழா 21.02.2026 அன்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை த... மேலும் பார்க்க

"பசும்பால் புத்திசாலியாக்கும்; எருமைப் பால் சோம்பேறியாக்கும்" - ராஜஸ்தான் பாஜக அமைச்சர் பேச்சு

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நடந்த பசு பாதுகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக-வைச் சேர்ந்த அம்மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், ''பசும்பால் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கிறது. அதேசமயம் எருமைப்... மேலும் பார்க்க

அமெரிக்காவின் அழுத்தம்; போதைப்பொருள் கடத்தல் மன்னன் மெக்சிக்கோவில் சுட்டுக்கொலை - வெடித்த கலவரம்

மெக்சிக்கோ போதைப் பொருள் கடத்தலுக்கு மிகவும் பெயர் பெற்றது. அங்கு போதைப்பொருள் கடத்தலில் நெமேசியோ ஒசேகுரா ரூபன் செர்வாண்டஸ் என்று அழைக்கப்படும் எல் மென்ச்சோ என்பவன் தான் போதை பொருள் கடத்தலில் கொடிகட்ட... மேலும் பார்க்க

அஜித் பவார் : `காரணத்தை அறிய அனைவரும் விரும்புகிறார்கள்' - விமான விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணை

மகாராஷ்டிராவில் துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த மாதம் 28ம் தேதி பாராமதியில் நடந்த விமான விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து சந்தேகம் கிளப்பிய சரத் பவார் பேரன் ரோஹித் பவார், விமான வ... மேலும் பார்க்க