களக்காட்டில் புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை
களக்காட்டில் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், புறவழிச்சாலை அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்குத் தீா்வு காண, களக்காட்டில் புறவழிச்சாலை அமைக்க கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வுப் பணி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் பிறகு அடுத்தகட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
ஆகவே, சம்பந்தப்பட்ட துறையினா் புறவழிச்சாலை அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.