செய்திகள் :

''காங்கிரஸுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியதை தோழமைக்கட்சிகள் விவாதமாக்காதீர்கள்"- செல்வப்பெருந்தகை

post image

இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஆனால் இன்னும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் முடிவுக்கு வந்தபாடில்லை.

குறிப்பாக திமுக கூட்டணியின் முக்கிய கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு இழுபறியாகவே இருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டார்.

ஸ்டாலின், செல்வப்பெருந்தகை
ஸ்டாலின், செல்வப்பெருந்தகை

இந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு செய்தியாளார்களைச் சந்தித்த அவர், ``தமிழக மக்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், எங்களுக்குக் கூடுதலாக மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

அந்தத் தொகுதிகளை நாங்கள் முழு மனநிறைவோடு ஏற்றுக்கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் கட்சிக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை மற்ற கட்சிகள் விவாதப் பொருளாக்குவது முறையல்ல.

தி.மு.க கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் போன்ற தோழமைக் கட்சிகள் தங்களுக்குக் கூடுதல் இடங்கள் வேண்டும் எனக் கேட்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் காங்கிரஸ் கட்சியை மையப்படுத்தி கேள்வி எழுப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தோழமைக் கட்சிகள் தாராளமாகத் தங்கள் உரிமையைக் கேட்கலாம். மாண்புமிகு முதலமைச்சருக்குப் பெரிய மனமிருக்கிறது, வாய்ப்பிருந்தால் நிச்சயம் வழங்குவார்.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

அதே சமயம், காங்கிரஸ் கட்சிக்கு ஏன் இத்தனை இடங்கள் வழங்கப்பட்டன என்பதைத் தோழமைக் கட்சிகள் எங்களின் கடந்த காலத் தியாகங்களைப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு காலத்தில் 110 தொகுதிகளில் போட்டியிட்ட நாங்கள், பிறகு 63, 41, தற்போது 25 எனத் தொடர்ந்து எங்களின் எண்ணிக்கையை விட்டுக் கொடுத்து வந்துள்ளோம். எங்களின் இந்த வேதனையை மற்றவர்கள் உணர வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'பேராவூரணி பேரூராட்சியில் ஊழல்?' - திமுக பெண் சேர்மன், கணவர் உட்பட 7 பேர் மீது விஜிலென்ஸ் FIR

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பேராவூரணி பேரூராட்சி திமுக சேர்மன் சாந்தி. இவரது கணவர் சேகர், திமுக நகர செயலாளர். சேகரின் தந்தையும், சாந்தியின் மாமனாருமான செல்வராஜ் தஞ்சை தெற்கு மாவட்ட திம... மேலும் பார்க்க

"உயிருடன் இருந்தால் விடமாட்டோம்" - நெதன்யாகுவுக்கு ஈரான் இராணுவம் நேரடி கொலை மிரட்டல்!

கடந்த பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்சத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன்... மேலும் பார்க்க

"பாஜக-வின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் சூன்யமாகிவிடும்" - திருமாவளவன் எச்சரிக்கை

எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமா... மேலும் பார்க்க

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல்: "தேர்தல் தேதி இன்று மாலை வெளியாகும்" - தேர்தல் ஆணையம்

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. இ... மேலும் பார்க்க

"நெதன்யாகு பேசுவது போல் ஏஐ வீடியோ?" - சர்ச்சைக்கு இஸ்ரேல் அரசு சொல்லும் பதில் என்ன?

இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் மூன்றாவது வாரத்தைத் தாண்டியுள்ளது. இத்தாக்குதலில் ஈரானும் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு மத்திய கிழக்கில் உ... மேலும் பார்க்க

Trump: "பொழுதுபோக்கிற்காக மீண்டும் தாக்குவோம்" - ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ட்ரம்ப்

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதில் தாக்குதல் தொடுத்துவருகிறது ஈரான். கடந்த பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடந்து வரும் இந்த வான்வழிப் போரில் இதுவரை 2,000-க்கும் மே... மேலும் பார்க்க