செய்திகள் :

கிண்டியில் மெட்ரோ, பேருந்து, ரயில் சேவையை இணைக்கும் மையம்; பட்டாபிராமுக்கு மெட்ரோ ரயில்

post image

கிண்டியில் மெட்ரோ, பேருந்து, ரயில் போக்குவரத்தை இணைக்க ரு.50 கோடியில் பன்முக மையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நிதிநிலை அறிக்கை பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில்,

சென்னை விமான நிலையம், கிளாம்பாக்கம் இடையே ரூ.9335 கோடியில் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் நடைபெறும்.

கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் இடையே மெட்ரோ ரயில் சேவை உருவாக்கப்படும்.

சென்னை கிண்டியில் மெட்ரோ, பேருந்து, ரயில் போக்குவரத்தை இணைக்க ரு.50 கோடியில் பன்முக மையம்

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் தடம் வரும் டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும்.

உதகை, கொடைக்கானலில் ரோப் வே திட்டத்தை ஏற்படுத்தவும் ஆய்வு.

போக்குவரத்துத் துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு.

போக்குவரத்துத் துறையில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு.

மார்ச் 27, 28-ல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்!

மார்ச் 27, 28 தேதிகளில் தமிழகத்தில் வெப்பநிலை 2 -3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் இதனால் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொட... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலையத்தில் தகராறு: ஊழியர் அடித்துக் கொலை!

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியருக்கும் லாரி ஓட்டுநர் - கிளீனர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து அன்ன... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் தங்கும் விடுதியில் தீ விபத்து!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தங்கும் விடுதியில் திங்கள்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தரைத்தளம் மற்றும் மூன்று த... மேலும் பார்க்க

2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம்.. தவெகவின் போஸ்டரால் பரபரப்பு!

கோவை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் 2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்ற வாசகத்துடன் கோவையில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நடிக... மேலும் பார்க்க

கடவுள் சரியாகத்தான் இருக்கிறார்; சில மனிதர்கள்தான் சரியில்லை: நீதிபதிகள்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில், கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பார்க்க

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதியில்லை: உச்சநீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது. திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் ... மேலும் பார்க்க