செய்திகள் :

கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை! -இபிஎஸ்

post image

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை:

சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ‘கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

"அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை" என்று பெண் பாதுகாப்பு மீதான பொறுப்புடன் நான் சுட்டிக்காட்டிய போது, "எடப்பாடி பழனிசாமி பீதியைக் கிளப்புகிறார்" என்று சொன்ன அமைச்சர்கள், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

அரசுப்பள்ளி மாணவிக்கு, தான் படிக்கும் பள்ளிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்பது வேலியே பயிரை மேய்கின்ற செயல், திமுக அரசே இக்கொடுரமானச் செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு திமுக அரசு தலைகுனிய வேண்டும். பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

போச்சம்பள்ளி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஓய்வூதியத்தை ஆராய குழு: ‘திமுக வாக்குறுதிக்கு முரண்’

ஓய்வூதியத் திட்டத்தை ஆராய தமிழக அரசு குழு அமைத்திருப்பது திமுக அளித்த வாக்குறுதிக்கு முரணாக அமைந்துள்ளதாக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவா் கு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வ... மேலும் பார்க்க

போக்குவரத்து தொழிலாளா்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு: அரசுக்கு அண்ணா தொழிற்சங்கம் கெடு

போக்குவரத்து தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை பிப்.10-ஆம் தேதிக்குள் நடத்தாவிட்டால் பிப்.26 முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அண்ணா தொழிற்சங்க பேரவை கெடு விதித்துள்ளது. சென்னை த... மேலும் பார்க்க

முதுநிலை மருத்துவ படிப்புக்கு சிறப்பு குழு: என்எம்சி அழைப்பு

முதுநிலை மருத்துவ படிப்புகளில் உள்ள சிறப்புத் துறைகளுக்கான மாதிரி பாடத்திட்டங்களை வகுக்க நிபுணா் குழுவை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அமைக்க உள்ளது. அதில் இடம்பெற விருப்பமுள்ள தகுதியான மருத்துவப் ப... மேலும் பார்க்க

காங்கிரஸ் சாா்பில் திருப்பரங்குன்றத்தில் இன்று மத நல்லிணக்க வழிபாடு

திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை (பிப்.6) மத நல்லிணக்க வழிபாடு நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா். சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவா் புதன்கிழமை அளி... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி- அமைச்சா் சேகா்பாபு

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஏதோ ஒரு எண்ணத்தை மையமாக வைத்து, இந்த ஆட்சிக்கு ஓா் அபாயத்தை உருவாக்க வேண்டும் என நினைத்து பாஜகவினா் செயல்படுகின்றனா் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: தனித்தோ்வா்களுக்கு பிப்.14-இல் அனுமதிச் சீட்டு

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் தனித் தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு பிப்.14-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் புதன்க... மேலும் பார்க்க