மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
குட் பேட் அக்லி வெளியீட்டில் மாற்றம்?
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பை முடித்து கார் பந்தயத்திற்கு தயாராகி வருகிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடிக்கிறார்.
அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். படத்தை பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்க | ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி?
ஆனால், விடாமுயற்சி டீசரில் பொங்கல் வெளியீடு என அறிவித்துள்ளதால் குட் பேட் அக்லியின் வெளியீட்டுத் தேதி மாறும் எனத் தெரிகிறது.
இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியீட்டுக்கு தயாரானாலும் முதலில் எந்தப் படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.