செய்திகள் :

குல்லாய் உச்சியில் இருக்கும் மென்மையான பந்து எதற்கு? - இது தெரியாமப் போச்சே?! - 12

post image

குளிர்கால குல்லாய்களின் (Beanies / Winter hats) உச்சியில் வைக்கப்படும் அந்த மென்மையான நூல் பந்து, இன்று ஃபேஷனுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், இதன் பின்னணியில் சுவாரசியமான வரலாற்று காரணம் உள்ளது.

பிரெஞ்சு கடற்படை மாலுமிகள் தங்கள் தொப்பிகளில் இந்த பொம்-பொம்களை (Pom Pom) பயன்படுத்தினர். கப்பலின் கீழ்த்தளங்களில் மேற்கூரைகள் மிகவும் தாழ்வாக இருக்கும். கடல் சீற்றத்தின் போது கப்பல் குலுங்கும்போதோ அல்லது அவசரமாக நடக்கும்போதோ, மாலுமிகளின் தலை கூரையில் முட்டி காயம் ஏற்படாமல் இருக்க, இந்த மென்மையான பந்து ஒரு மெத்தை போலவும், "தலை இடிக்கப் போகிறது" என்று உணர்த்தும் எச்சரிக்கையாகவும் செயல்பட்டது.

Beanies
Beanies

ஐரோப்பிய ராணுவ வரலாற்றிலும் இதற்கு முக்கியப் பங்குண்டு. நெப்போலியனின் காலாட்படை வீரர்களும், ஸ்காட்டிஷ் ராணுவப் பிரிவினரும் தாங்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள், அவர்களின் பதவி என்ன என்பதை எளிதாக அடையாளம் காண, தொப்பியில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் நிறங்களில் இந்த பொம்-பொம்களைப் பயன்படுத்தினர்.

இது சமீபத்திய கண்டுபிடிப்பு அல்ல. 1904-ஆம் ஆண்டு ஸ்வீடனில் கண்டெடுக்கப்பட்ட வைக்கிங் காலத்து `ஃப்ரேயர்' (Freyr) என்ற கடவுளின் சிலையிலேயே, தலையில் பொம்-பொம் போன்ற அமைப்பைக் கொண்ட தொப்பி இருப்பதை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தென் அமெரிக்காவின் சில பாரம்பரிய மக்கள், தங்கள் திருமண நிலையைக் குறிக்க, வெவ்வேறு நிறங்களிலான பொம்-பொம்களைத் தங்கள் ஆடைகளிலும் தொப்பிகளிலும் அணிந்தனர்.

கடுமையான பனிப்பொழிவின் போது, தடிமனான கையுறைகளை அணிந்துகொண்டு தொப்பியைக் கழற்றுவது கடினம். இந்த `பொம்-பொம்’ தொப்பியை எளிதாகப் பிடித்துக் கழற்ற உதவுகிறது.

Beanies
Beanies

அதிக பனியில் யாராவது புதைந்துவிட்டாலோ அல்லது விழுந்துவிட்டாலோ, வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் இந்த சிறிய பந்து அவர்களை எளிதில் கண்டுபிடிக்கவும் உதவியதாகக் கூறப்படுகிறது.

டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? - இது தெரியாமப் போச்சே?! - 22

பழைய ரேடியோக்களில் அலைவரிசை கிடைக்காதபோது வரும் `உஷ்' என்ற இரைச்சலிலும், பழைய ஆண்டெனா தொலைக்காட்சிகளில் அலைவரிசை இல்லாதபோது திரையில் தெரியும் கறுப்பு-வெள்ளைப் புள்ளிகளிலும் நமது பிரபஞ்சத்தின் தொடக்க க... மேலும் பார்க்க

Rapido ஓட்டுநரின் அநாகரீக செயல்; `பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறதா?' வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்

அனுஷ்கா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவர் ஒரு இடத்திற்குச் செல்ல ராபிடோ பைக் சேவையைப் பயன்படுத்தியுள்ளார். பயணம் முடிந்த பிறகு, அந்த ப... மேலும் பார்க்க

புதுச்சேரி: மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது | Photo Album

புதுச்சேரியில் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டது.வலைகளை சீரமைக்கும் மீனவர்வலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்படகு எஞ்சின் பழுது நீக்கம்படகு முழுமையாக பழுதுபார்க்க கரையில் ஏற்றும் பணிவலைகளை சீரம... மேலும் பார்க்க

"பூனைக்குட்டிகளுக்கு `தந்தை' யார்?" - பூனைகளின் காதல் பஞ்சாயத்தும் போலீஸின் அதிரடி தீர்ப்பும்!

பொதுவாக விவாகரத்து அல்லது குடும்பத் தகராறுகளில் `குழந்தை பராமரிப்புச் செலவு' கேட்டு நீதிமன்றம் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால், பெங்களூருவில் ஒரு படி மேலே போய், "உன் பூனைதான் என் பூனையைக் கர்ப்பமாக்... மேலும் பார்க்க

“எல்லாருக்கும் ‘Yes’ சொன்னேன்… ஆனா என் வாழ்க்கை இப்போ ‘No’ சொல்ல ஆரம்பிச்சுடுச்சு”- பேசும் மனசு - 6

“நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து, நான் எப்போதும் நம்பிக்கைக்குரிய ஆளாக இருக்கவேண்டும் என்று நினைத்துதான் வேலை செய்து வருகிறேன். யாராவது உதவி கேட்டால்,... மேலும் பார்க்க

Fridge-ன் Freezer-ல் ஏன் Light இல்லை? - இது தெரியாமப் போச்சே?! - 20

பிரிட்ஜைத் திறந்தால் பளிச்சென்று லைட் எரியும், ஆனால் ஃப்ரீசரைத் திறந்தால் லைட் இருக்காது. பனி படிந்து விளக்கு உடையும் என்பதுபோல் காரணங்கள் சொல்லப்பட்டாலும் அது ஏன் என்பதன் பின்னணியில் சுவாரசியமான தகவல... மேலும் பார்க்க