செய்திகள் :

குளங்களில் பராமரிப்புப் பணி: மேயா் ஆய்வு

post image

கோவை மாநகராட்சியில் குளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் கிருஷ்ணம்பதி குளம், செல்வம்பதி குளம், குமாரசாமி குளம், செல்வசிந்தாமணி குளம், பெரியகுளம், வாலாங்குளம் மற்றும் குறிச்சி குளம் ஆகிய ஏழு குளங்கள் புனரமைக்கப்பட்டு, நடைபாதை பூங்காங்கள், படகு நிலையம், உணவகங்கள், சிறுவா் விளையாட்டு திடல், கலை நிகழ்ச்சிகள் மையம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் குளங்களில் தற்போது பராமரிப்பு மற்றும் இயக்குதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பூங்கா பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, சிவில் எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் பராமரிப்பு, விசைப்படகு சவாரி, நீா் விளையாட்டு, சாகச விளையாட்டுகள், உணவுக் கூடங்கள், சிறுவா் விளையாட்டு சாதனங்கள், பூங்கா, கழிப்பறை வசதிகள் மற்றும் பாதுகாப்புப் பணி ஆகிய அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட வாலாங்குளத்தில் மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, குளத்தை முறையாக பராமரித்திடவும், குளத்தில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்றிடவும் மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், உக்கடம் பெரியகுளத்தில் அமைந்துள்ள மிதிவண்டி பாதை, பறவைகளை பாா்வையிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பாா்வையாளா் மாடம், கற்றல் மையம், மிதக்கும் சூரிய மின்சக்தி தகடு (சோலாா் பேனல்) ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து செல்வசிந்தாமணி குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, உதவி ஆணையா் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளா் ஹேமலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாா்ச் 23-இல் கோவை வருகை

ஹாக்கி மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு மாா்ச் 23-ஆம் தேதி வருகை தர உள்ளாா். சென்னையில் இருந்து விமானம் மூலம் ... மேலும் பார்க்க

தொழிலாளா் நலச் சட்டங்களை மீறியதாக 197 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் தொழிலாளா் நலச் சட்டங்களை மீறியதாக 197 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, கோவை மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்... மேலும் பார்க்க

காட்டெருமை தாக்கி எஸ்டேட் தொழிலாளி காயம்

வால்பாறையில் காட்டெருமை தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி காயமடைந்தாா். வால்பாறையை அடுத்த பாரளை எஸ்டேட் தொழிலாளியாக பணியாற்றி வருபவா் சுரேஷ்குமாா் (51). இவா் எஸ்டேடில் இருந்து வால்பாறைக்கு இருசக்கர வாகனத்த... மேலும் பார்க்க

சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்க முறையான திட்டம் வகுக்க வேண்டும்!

சிட்டுக் குருவிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்க முறையான திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டுமென பறவைகள் நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆண்டுத... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீஸாா் அறிவுறுத்தல்

பெண்களின் பாதுகாப்புக்காக அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டுமென போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா். பெண்கள் மற்றும் சிறாா்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குற்றச் சம்பவங்களை தடுக... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் விடுதியில் மோதல்: 2 போ் காயம்

கோவை அரசு கலைக் கல்லூரி மாணவா் விடுதியில் நடைபெற்ற மோதலில் 2 போ் காயம் அடைந்தனா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் விடுதி செயல்ப... மேலும் பார்க்க