செய்திகள் :

குஷ்புவின் ஃபேவரைட் ஷோ கம்பேக்; அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை விட்ட நடிகர்! - Serial updates

post image

ஜாக்கெட்.. ஜாக்பாட்! - குஷ்பு கம்பேக்

ஜெயா டிவியில் நடிகை குஷ்பு தொகுத்து வழங்கிய 'ஜாக்பாட்' நிகழ்ச்சி ஞாபகமிருக்கிறதா? 'நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்திருந்த ஜாக்கெட் டிசைனைப் பார்ப்பதற்காகவே பொது அறிவு தொடர்பான இந்த நிகழ்ச்சியைப் பார்த்தோம்' என்று சொன்ன பெண்களெல்லாம் அப்போது பார்த்திருப்பீர்கள்.

இந்தியில் 'கோன் பனேகா க்ரோர்பதி' தமிழில் 'கோடீஸ்வரன்' ஆகிய நிகழ்ச்சிகளின் வரிசையில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி மீண்டும் புது வடிவம் பெற்று அதே ஜெயா டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

குஷ்பு
குஷ்பு

கடந்த சில தினங்களாக 'குழப்பத்தில் குஷ்பு' என்ற விளம்பரம் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வந்ததே, அது இந்த நிகழ்ச்சியினுடையதுதானாம்.

பாஜகவில் அளிக்கப்பட்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகு தீவிர அரசியலிலும் அவ்வளவாக ஆர்வம் காட்டாத குஷ்புவை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சின்னத்திரைக்கு அழைத்து வந்திருக்கிறது ஜெயா டிவி.

Zee

ஜீ 100

ஜீ சேனல் குழுமத்துக்கு இது 100வது ஆண்டு. அதைக் கொண்டாடும் விதமாக நாட்டின் முக்கிய நகரங்களில் விழா எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழ் சார்பாகவும் நேற்று அதற்கான விழா நடந்தது. சென்னை கிண்டியிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், பிரசாந்த, ஆர்யா, விஜய் ஆண்டனி, கலையரசன், நடிகை ராதிகா என பெரிய திரையிலிருந்தும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நடிகர் நடிகைக‌கள், ஆரம்ப காலத்திலிருந்து சேனலுடன் பயணித்தவர்கள் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே கலந்து கொண்டனர்.

சாய் சக்தி

அதிக வட்டி ஆசை, அபேஸ் ஆன காசு!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சாய் சக்தி ஒரு புகாரைத் தந்துள்ளார். அதிக வட்டி தருவதாகச் சொல்லி சில லட்சங்களைத் தன்னிடமிருந்து ஏமாற்றி விட்டது ஒரு நிறுவனம் என அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.

சாய் சக்தியிடம் பேசிய போது, ``அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை அவங்ககிட்ட முதலீடு செய்தது என் தப்புதான். ஆரம்பத்துல அஞ்சாறு மாசம் சொன்ன மாதிரியே வட்டி தந்தாங்க. பிறகு வட்டியும் வரலை. ஆளும் எஸ்கேப். வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டதாச் சொல்றாங்க. என்னை மாதிரியே பணத்தை இழந்தவங்க நிறையப் பேர் இருக்காங்க. சிலர் புகார் தர்றதுக்குத் தயங்கிட்டிருக்காங்க.

எங்ககிட்ட மோசடி செஞ்சுட்டு எஸ்கேப் ஆன கம்பெனி இடத்தை பெயரையெல்லாம் மாத்திட்டு அடுத்த மோசடியை ஆரம்பிச்சுட்டதா தகவல் வந்தது. அதனாலதான் இனிமேலாவது யாரும் இவங்களால் பாதிக்கப்படக் கூடாங்கிறதுக்காகவே நான் புகார் கொடுத்திருக்கேன். காவல்துறை இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை இழந்த எங்களுக்கு அதை மீட்டுத் தரணும்னு கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.

கவிதா பாரதி

நான்கு அணி, சீரியல் இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் கடும் போட்டி!

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக தற்சமயம் மங்கை அரிராஜன் இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழான நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

கவிதா பாரதி தலைமையில் ஓர் அணி, தற்போதைய தலைவர் மங்கை அரிராஜன் தலைமையில் ஓர் அணி, தளபதி தலைமையில் ஓர் அணி, ஆதித்யா தலைமையில் ஓர் அணி என நான்கு முனைப் போட்டி என்கிறார்கள்.

Bigg Boss The Common Man: '22 எபிசோடுகள், ஒரேயொரு போட்டியாளர்' - எதற்காகத் தெரியுமா?

விஜய் டிவியில் 2017ம் ஆண்டு ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு. எனவே இந்த வருடம் ஸ்பெஷலாக எதாவது செய்யலாமென்றே 'பிக்பாஸ் தி காமன் மேன்' அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்... மேலும் பார்க்க

Shakila: 'பல மணிநேரம் ரீல்ஸ் பார்ப்பேன்' - கழுத்தில் அறுவை சிகிச்சை ஏன்? ஷகீலா விளக்கம்

நடிகை ஷகீலாவுக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்த நிலையில் அவருக்கு என்ன ஆயிற்று என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த... மேலும் பார்க்க

`கயல் சீரியலில் இனி சஞ்சீவ் வரமாட்டாரா?' - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?

கயல் சீரியலில் இருந்து ஹீரோ சஞ்சீவ் வெளியேறி விட்டதாகத் தெரிய வருகிறது. கதைப்படி சீரியலில் அவர் கோமா நிலையிலிருப்பதாகக் காட்டப்பட்டாலும், இனி அவர் சீரியலில் தொடர வாய்ப்பில்லை என்றே கூறுகிறார்கள் சீரிய... மேலும் பார்க்க

Bigg Boss: "எனக்குக் கிடைத்த அந்த ஆழமான அன்பை..." - பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி பற்றி ஓவியா

பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி வருகிற 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்கள். இந்த காமன் மேன் நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் பலரும் கலந்... மேலும் பார்க்க

`சொந்த மருமகளை கூட வாய் நிறைய அப்படி கூப்பிட்டாரா தெரியல‌..' - மறைந்த ஜெயமணி குறித்து நடிகை அபிதா

திருமதி செல்வம், மெட்டி ஒலி, சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகர் ஜெயமணி நேற்று சென்னையில் காலமானார். சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு இன்று மாலை அவ... மேலும் பார்க்க

"'மெட்டி ஒலி 2' சீக்கிரமே நடக்க வாய்ப்பு இருக்கு!" - விஷ்வா கம்பேக் பேட்டி | Samanthi

'மெட்டி ஒலி' சீரியல் மூலம் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் விஷ்வா. சீரியலில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தவர், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் 'சாமந்தி' சீரியல் மூலம் கம்பேக் கொடுத்திரு... மேலும் பார்க்க