Murali Naik: "காலையில்தான் எங்களிடம் பேசினான்" - பாகிஸ்தான் தாக்குதலில் மகனை இழந...
கூட்டுறவு சங்கங்களின் பணியாளா்களுக்கான குறைதீா் முகாம்
திருப்பத்தூரில் கூட்டுறவு சங்கங்களின் பணியாளா்களுக்கான குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமுக்கு, திருப்பத்தூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஆ.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து பணியாளா்களிடம் மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.
மேலும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
முகாமில் பணி மாறுதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா்.
இதில், கூட்டுறவு சாா் பதிவாளா்கள் சித்ரா, கோபிநாதன், நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.