செய்திகள் :

`கேட்ட மூன்றில் இரண்டு அவுட்; அந்த ஒன்று?' - ஶ்ரீதர் வாண்டையார் போடும் கணக்கு திமுக-விடம் பலிக்குமா?

post image

திமுக கூட்டணியில் சமீபத்தில் தேமுதிக இணைந்தது தமிழக அரசியல் வட்டத்தில் பேசு பொருளாக அமைந்தது. கூட்டணி கட்சிகளிடம் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை வேகமாக நடத்தி வருகிறது திமுக தலைமை.

மூவேந்தர் முன்னேற்ற கழகம் திமுக கூட்டணியில் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையும் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒரு தொகுதியில் ஶ்ரீதர் வாண்டையார் போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஶ்ரீதர் வாண்டையார்

இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், `மூவேந்தர் முன்னேற்ற கழகம் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் ஶ்ரீதர் வாண்டையார் சுமார் 75,000 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகனிடம் தோல்வியை தழுவினார்.

எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள, நாங்கள் கேட்ட தொகுதியை அதிமுக எங்களுக்கு ஒதுக்கவில்லை. நாங்கள் விரும்பிய தொகுதியை கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்னு அப்போது மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினரால் பேசப்பட்டது.

கடந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியை தான் அதிமுக-விடம் ஶ்ரீதர் வாண்டையார் தரப்பில் கேட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் கும்பகோணம் ஒதுக்கினர். இதையடுத்து அதிமுகவுடன் மனகசப்பு ஏற்பட்டு கூட்டணியில் இருந்து விலகினர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தனர்.

தற்போது அந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில், `ஶ்ரீதர் வாண்டையார் நம் குடும்பத்தில் ஒருத்தர் என தாத்தாவும், அப்பாவும் சொல்வார்கள். அவர் குடும்பத்தில் மட்டுமல்ல கூட்டணியிலும் ஒருவர். எங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்' என ஶ்ரீதர் வாண்டையார் குறித்து துணை முதல்வர் உதயநிதி பேசினார்.

சமீபத்தில் ஒன்றிய அரசு பட்ஜெட் குறித்து கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியது திமுக. இதில் மயிலாடுதுறையில் கலந்து கொண்ட ஶ்ரீதர் வாண்டையார், `ஒன்றிய அரசு பல நெருக்கடிகள் கொடுத்தும் நல்லாட்சி செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்காக அவர் இரவு பகல் பாராமல் உழைக்கிறார். தமிழகத்தில் அவர் கால் படாத இடங்களே இல்லை'னு ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார்.

ஶ்ரீதர் வாண்டையார்

இப்படியாக ஒத்த எண்ணத்தில் இந்த கூட்டணி தொடரும் நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாண்டையார் மூன்று தொகுதிகளை குறிப்பிட்டு அதில் ஒரு தொகுதியை கொடுங்கள்னு கேட்டதாக சொல்கிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவையாறு ஆகிய மூன்று தொகுதிகளை குறிப்பிட்டு கேட்டுள்ளார். இதில் முக்குலத்தோர் வாக்குகள் நிறைந்த தொகுதி என்பதால் ஶ்ரீதர் வாண்டையாரின் முதல் சாய்ஸாக ஒரத்தநாடு இருந்தது. முன்கூட்டியே திட்டமிட்டு தொகுதிக்குள் சில நிகழ்ச்சிகளையும் நடத்தினார்.

இப்படியான சூழலில் வைத்திலிங்கம் திமுக-வுக்குள் என்ட்ரி கொடுத்ததால் ஒரத்தநாடு அவருக்கு என்பது உறுதியாகி விட்டது. இந்நிலையில் ஶ்ரீதர் வாண்டையார் தஞ்சாவூர், திருவையாறு என இரு தொகுதிகளில் ஒன்றை கேட்பதாகவும், குறிப்பாக தஞ்சாவூர் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என பேசியதாக சொல்கிறார்கள்.

திருவையாறு மத்திய மாவட்ட செயலாளரான, சிட்டிங் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் போட்டியிடுவது உறுதி என்பதால் அதை கொடுப்பதற்கு வாய்ப்பில்லாத சூழல். அவர்கள் விரும்பியதில் மிச்சமிருப்பது தஞ்சாவூர் தொகுதி. தஞ்சாவூரில் ஶ்ரீதர் வாண்டையாரின் சொந்தங்கள் நிறைந்திருக்கின்றனர். தனக்கு செல்வாக்கு இருப்பதாகவும் நினைப்பதால் தஞ்சாவூர் தொகுதியில் தான் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என கருதுகிறார்.

தஞ்சாவூர்
தஞ்சாவூர்

2026ல் ஶ்ரீதர் வாண்டையாரை சட்டமன்றத்திற்குள் அனுப்ப வேண்டும் என அக்கட்சியினர் நினைக்கிறார்கள். அதற்கான வேலையை இப்போதே தொடங்கி விட்டனர். திமுக தலைமை அவருக்கு தஞ்சாவூர் தொகுதியை ஒதுக்குகிறதா அல்லது வேறு தொகுதி தருகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நாம் வலிமையாக இருக்கிறோம் இந்த முறை நாம் வெற்றி பெறுவது உறுதினு நம்பிக்கையுடன் பேசி வருகிறார் ஶ்ரீதர் வாண்டையார்,. தஞ்சாவூர் தொகுதியியை மனதில் வைத்து அவரது மூவ் இருப்பதாக தெரிகிறது" என்றனர்.

மொத்தம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - தமிழ்நாட்டில் வெளியான இறுதி வாக்காளர் பட்டியல்!

கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந... மேலும் பார்க்க

முழு வரி ரத்திற்கு 'சான்ஸே இல்லை': அடுத்த வரி வழிகளை தேடும் ட்ரம்ப் அரசு; இருக்கும் ஆப்ஷன்கள் என்ன?

என்னதான் 'சட்டத்திற்குப் புறம்பானது' என்று விதிக்கப்பட்ட வரியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தாலும், வரி போடுவதை கைவிடுவதாக இல்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த எண்ணத்தின் ஒரு பகுதிதான் தீர்ப்பு வந்த அன்றே... மேலும் பார்க்க

எஸ்.டி.எஸ், பாக்யராஜ் முதல் பண்ருட்டியார் வரை; அடேங்கப்பா! அதிமுக-விலிருந்து எத்தனை எத்தனை கட்சிகள்?

ஓபிஎஸ் அணியிலிருந்த மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரன், 'எம்.ஜி.ஆர் அண்ணா திமுக' என்ற கட்சியை சமீபத்தில் தொடங்கியுள்ளது, பேசு பொருளாகியுள்ளது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்இது ஒன்றும் புதிதல்ல, திமுக... மேலும் பார்க்க

`திமுக கூட்டணி குறித்த கேள்விகள்; செலவுக்கு.?' - தே.மு.தி.க நேர்காணலில் பிரேமலதா கேட்ட கேள்விகள்!

வரும் சட்டமன்ற தேர்தலில் நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப்பிறகு தி.மு.கவுடன் கூட்டணியில் தே.மு.தி.க போட்டியிடுகிறது. அதையொட்டி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த தே.மு.தி.க நிர்வாகிகளிடம் கோயம்பேட... மேலும் பார்க்க

கேரளா: பாஜக மாநிலத் தலைவரை எதிர்த்து களமிறங்கும் சசிதரூர்; விஐபி தொகுதியாகும் நேமம்; பின்னணி என்ன?

கேரள மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தலைநகரான திருவனந்தபுரத்தில் போட்டியிட சி.பி.எம், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் முண்டியடிக்கும் நிலை உள்ளது.கேரளாவில் 10 ஆண்டுகளா... மேலும் பார்க்க