செய்திகள் :

கேரளா: வீடியோ புகாரால் தற்கொலை செய்த நபர்; பெண் மீது வழக்கு; மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவு என்ன?

post image

கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியில் வசிக்கும் ஷிம்ஜிதா முஸ்தபா(35) என்ற பெண் கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில், பஸ் பயணத்தின்போது ஒரு நபர் தவறான நோக்கத்துடன் தன்னைத் தொட்டதாகத் தெரிவித்திருந்தார். அந்த நபரின் வீடியோவையும் ஷிம்ஜிதா முஸ்தபா வெளியிட்டார். அந்த வீடியோவில் இருந்த நபர் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தீபக்(42) எனத் தெரியவந்தது.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் தீபக் அந்த வீடியோவைப் பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த தீபக் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

தற்கொலை
தற்கொலை

இளம்பெண் வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக அந்தப் பதிவைப் போட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ராகுல் ஈஸ்வர் என்பவர் டி.ஜி.பி-க்குப் புகார் அனுப்பியிருந்தார்.

இந்த விவகாரம் விவாதமானதை அடுத்து தாமாக முன்வந்து சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது மனித உரிமைகள் ஆணையம். போலீஸார் விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், நார்த் ஷோன் டி.ஐ.ஜி இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், பிப்ரவரி 19-ம் தேதி கோழிக்கோடு அரசு விருந்தினர் மாளிகையில் நடக்கும் சிட்டிங்கில் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வீடியோ வெளியானதால் தற்கொலை செய்துகொண்ட தீபக்
வீடியோ வெளியானதால் தற்கொலை செய்துகொண்ட தீபக்

இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட தீபக்கின் தாய் கன்யகா அளித்த புகாரின் அடிப்படையில் ஷிம்ஜிதா முஸ்தபா மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தை டீ-ஆக்டிவேட் செய்து வைத்துள்ளார்.

தீபக்கின் குடும்பத்தினருக்கு வழக்கு சம்பந்தமான அனைத்து உதவிகளையும் செய்வதாக ஆல் கேரளா மென்ஸ் அசோசியேஷன் தலைவர் வட்டியூர்காவு அஜித் குமார் அறிவித்துள்ளார்.

உடல் எடையைக் குறைக்க பரிந்துரையின்றி நாட்டு மருந்து; 'யூடியூப்' வீடியோவால் மாணவிக்கு நேர்ந்த சோகம்

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகள் கலையரசி (வயது 19). இவர், மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.கலையரசி உடல் பருமனாக இருந்துள்ளார்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: காதலனைப் பிரிய முடியாத காதலி தற்கொலை; துக்கம் தாங்காமல் காதலனும் உயிர் துறந்த சோகம்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகலா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநரான பாண்டி என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ள... மேலும் பார்க்க

தூத்துக்குடி: சொத்தைப் பிரித்து தர மறுத்த தாய்; கொன்று உடலை கிணற்றில் வீசிய மகன் - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள மிட்டாவடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசிங்கம். இவரின் மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி... மேலும் பார்க்க

சென்னை: காதலன் வீட்டில் மாணவி தற்கொலை - மருந்து பிரதிநிதி கைது!

சென்னை, நுங்கம்பாக்கம், புஷ்பா நகரைச் சேர்ந்தவர் பூஜா (24). இவர், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ்குமார். இவர் மருந்து பிரதிநிதியாக வேலைப்பார்த்து வருகிற... மேலும் பார்க்க

சென்னை கள்ளச்சாராய வழக்கில் பெண்ணை சிக்கவைக்க ஸ்பெஷல் டீம் போலீஸ் போட்ட மாஸ்டர் பிளான்; திடுக் தகவல்

சென்னை, மயிலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் தெருவில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் ... மேலும் பார்க்க

`715 கோடிக்கு சொத்து; சகோதரியான மனைவி'- பெண் இன்ஜினீயரை திருமணம் செய்வதாகக் கூறி ரூ.1.53 கோடி மோசடி!

பெங்களூரைச் சேர்ந்தவர் நவ்யா ஸ்ரீ (29). சாஃப்ட்வேர் இஞ்ஜினீயரான நவ்யா தனது திருமணத்திற்கு வரன் தேடி மேட்ரிமோனியல் தளத்தில் பதிவுசெய்து வைத்திருந்தார். விஜய் ராஜ் என்பவர் நவ்யாவின் குடும்பத்தை அணுகி நவ... மேலும் பார்க்க