``எனக்குத் தெரியாமல் காவலர்களுக்கு பணி'' -உள்துறை செயலருக்கு இன்ஸ்பெக்டர் அனுப்ப...
கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு
தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் அருகே கைப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் அருகேயுள்ள பிரகதாம்பாள் நகா் எதிரே தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஓராண்டுக்கு முன்பு தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், பணிகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் வெள்ளிக்கிழமை கைப்பேசி கோபுரம் அமைக்கத் தோண்டப்பட்ட பள்ளத்தில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.
இதற்கு பாஜக தெற்கு மாவட்டத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான பி. ஜெய்சதீஷ் மற்றும் அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, பள்ளத்தை பொக்ளின் இயந்திரம் உதவியுடன் மூடும் பணி தொடங்கியது. தகவலறிந்த கிழக்கு காவல் நிலையத்தினா் சென்று எச்சரித்துச் சென்றனா். என்றாலும், பள்ளமானது மண் நிரப்பப்பட்டு மூடப்பட்டது.