செய்திகள் :

'கொலைக் குற்றவாளியுடன் பெண் ஜெயிலருக்கு காதல்!' - சிறை ஊழியர்கள் திரளாகப் பங்கேற்று நடந்த திருமணம்

post image

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மத்திய சிறையில் சிறை அதிகாரியாக இருப்பவர் பெரோஷா. இப்பெண் ஜெயிலராக சிறையில் பணியாற்றியபோது கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த தர்மேந்திரசிங் என்பவரைச் சந்தித்தார்.

தர்மேந்திர சிங்கிற்கு சிறையில் கைது வாரண்ட் தொடர்பான பணிகள் வழங்கப்பட்டு இருந்தது. இதனால் இருவரும் அடிக்கடி சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே ஆரம்பத்தில் நட்பு ஏற்பட்டது.

இந்த நட்பு நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. 14 ஆண்டுகள் சிறையில் இருந்த தர்மேந்திர சிங் நன்னடத்தைக் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தர்மேந்திர சிங் திருமணம்
தர்மேந்திர சிங் திருமணம்

இதையடுத்து அவர்களது காதல் தொடர்ந்து எந்த வித தடையும் இன்றி நடந்துகொண்டிருந்தது. ஆனால் இக்காதலுக்கு மதம் பிரச்னையால் பெரோஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் தடையை மீறி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இத்திருமணத்திற்கு பெண் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. இதையடுத்து விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட துணைத்தலைவர் மிஸ்ராவும், அவரது மனைவியும் முன்னின்று இத்திருமணத்தை நடத்தி வைத்தனர்.

இத்திருமணத்தில் பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் மற்றும் சிறை ஊழியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஆயுள் தண்டனை கைதியை சிறை அதிகாரியே திருமணம் செய்து கொண்டது மத்தியப் பிரதேசத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு திருமணம் நடந்தது. எதுவும் பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக இது குறித்து மணமகன் தரப்பில் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தனர்.

வெள்ளியங்கிரி மலையில் மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு – ஒரே ஆண்டில் 8 பேர் உயிரிழந்த சோகம்!

கோவை மாவட்டம், பூண்டி பகுதியில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை, மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இந்த மலையேற ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு வனத்துறையினர் ... மேலும் பார்க்க

மும்பை: தர்ப்பூசணி சாப்பிட்டு 4 பேர் மரணமடைந்த விவகாரம் - விலகிய மர்மம்!

மும்பை பைதோனி பகுதியை சேர்ந்த அப்துல்லா என்பவர் குடும்பம் கடந்த மாதம் 25ம் தேதி இரவு உறவினர்களை அழைத்து தங்களது வீட்டில் விருந்து கொடுத்தனர். அனைவரும் பிரியாணி சாப்பிட்டனர். அன்று இரவு விருந்தினர்கள் ... மேலும் பார்க்க

பெண்களின் பாதுகாப்பை அறிய மஃப்டியில் நின்ற பெண் கமிஷனர்; ஒழுங்கீனமாக நடக்க முயன்று சிக்கிய ஆண்கள்

இரவு நேரங்களில் தனியாகப் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது. அதனை தெரிந்து கொள்ள ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் பெண் போல... மேலும் பார்க்க

Anand Mahindra: `வரலாற்றை மாற்றிய ஒரு வாக்கு' - ஆனந்த் மஹிந்திரா வியந்த திருப்பத்தூர் தேர்தல் களம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான போட்டி நிலவியது. தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க-வின் மூத்த நிர்வாகி கே.ஆர்... மேலும் பார்க்க

மும்பை: மாமரத்தில் விளைந்த சீதாப்பழம்? வைரலாகும் வீடியோ; ஆராய்ச்சியாளர் சொல்வது என்ன?

மும்பை அருகே மாமரம் ஒன்றில் சீதாப்பழம் விளைந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை அருகில் இருக்கும் பிவண்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் பாட்டீல். இவர் மளிகைக்கடை வைத்தி... மேலும் பார்க்க