செய்திகள் :

கோவில்பட்டி: ஈரான் – இஸ்ரேல் போரால் மூலப்பொருட்கள் விலை உயர்வு; தீப்பெட்டித்தொழில் முடங்கும் அபாயம்

post image

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், கடலையூர், தென்காசி மாவட்டம் திருவேங்கடம், குருவிகுளம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், வேலூர் மாவட்டம் குடியாத்தம், தர்மபுரி மாவட்டம் காவேரிபட்டினம் ஆகிய இடங்களில் 400 இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், 90 சதவீதம் பெண் தொழிலாளர்களே தீப்பெட்டி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மெழுகு

நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.  அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், தீப்பெட்டி தொழிலுக்கு மிகவும் முக்கிய மூலப்பொருளான மெழுகுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி விலையும் உயர்ந்துள்ளது.  தீப்பெட்டி  தொழிலுக்கு தேவையான மெழுகு ஈரானில் இருந்துதான்  இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. 

தற்போது நடந்து வரும் போர் காரணமாக கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால் மெழுகு வருவது நிறுத்தப்பட்டுள்ளது. போர் இன்னும் தொடர்ந்தால் மெழுகு கிடைக்காமல் போகும் நிலை ஏற்படுவது மட்டுமின்றி தீப்பெட்டி தொழில் முடங்குவதுடன் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும்  அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர் ராஜு  கூறுகையில், ”போர் காரணமாக ஈரானில் இருந்து வந்து கொண்டிருந்த மெழுகு முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

ராஜூ- தீப்பெட்டி உற்பத்தியாளர்

கையிருப்பில் உள்ள மெழுகுகளை உள்நாட்டு வியாபாரிகள்  விற்பனை செய்து வருகின்றனர்.  போருக்கு முன்பு ஒரு கிலோ மெழுகு ரூ.80 ஆக இருந்து நிலையில் தற்போது  130 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி தீப்பெட்டி பண்டல்களுக்கு தேவைப்படும் பிபி கவர்,  செலோ டெப் தயாரிக்க பயன்படும் வெர்ஜின்  பெட்ரோலிய பொருளும் ஈரானில் இருந்து தான் வருகிறது. அதுவும் தடைபட்டுள்ளதால் அதன் விலையும் உயர்ந்துள்ளது.

போருக்கு முன்பு ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.180 வரை விற்பனையாகிறது. மெழுகு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொழில் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. விலையேற்றம் காரணமாக ஒரு பண்டலுக்கு  ரூ 10 முதல் ரூ. 20 உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.108-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் பொட்டாசியம் குளோரைடின் விலையும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  

தீப்பெட்டி உற்பத்தி

ஏற்கனவே ஒரு முறை பயன்படுத்தப்படும் சீன பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் அழிந்து கொண்டிருக்கும் நிலையில்,  போர் காரணமாக மெழுகும் தடைபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தீப்பெட்டி தொழில் முற்றிலுமாக முடங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படும். வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி பண்டல் ஏற்றுமதி செய்வதும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால்  மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.  

'300 பில்லியன் டாலர்கள்' அமெரிக்காவில் ரிலையன்ஸ் முதலீடு; 'வரலாற்றில் மிகப்பெரியது' ட்ரம்ப் ஹேப்பி

அமெரிக்கா டெக்சாஸில் வர உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் முதலீடு செய்ய உள்ளது. இதற்காக தனது இந்திய கூட்டாளிகளுக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 'நன்றி' தெரிவித்துள்ளார்... மேலும் பார்க்க

ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு: பங்குச்சந்தையில் நிமிடங்களில் ரூ.12 லட்சம் கோடி இழப்பு!

வளைகுடா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. ஈரான் தனது நாட்டு எல்லையில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி நீர்வழித்தடத்தை அடைத்ததால் அந்த வழியாக கச்சா என்ணெய் எடுத்து வரும் கப்பல்கள் ப... மேலும் பார்க்க

அழிந்து வரும் நாட்டு கழுதைகளை வளர்க்க மத்திய அரசு ரூ.50 லட்சம் மானியம்! - முழு விவரம்!

தேசிய கால்நடை வளர்ப்பு திட்டத்தில், கழுதை வளர்ப்பு உள்ளிட்ட கால்நடைத் தொழில்களைத் தொடங்க இந்திய அரசு நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது. கழுதை வளர்ப்பு உள்ளிட்ட கால்நடைத் தொழில்களில் ஈடுபட நினைக்கும் ... மேலும் பார்க்க

`ஸ்டால் ஒதுக்கீடு டு கொலாபரேஷன்..!' - - பிசினஸ் ஸ்கேம்களில் சிக்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டிவை!

ஒரு நாட்டின் பொருளாதார முதுகெலும்பு சிறு குறு தொழில்கள்தான். ஆனால் அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் மோசடி. டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஆன்லைன் மார்க்கெட்டிங், இ-காமர்ஸ் என தொழில் வளர்ந்தாலும், அதனுட... மேலும் பார்க்க