பயணப்படிக்கு விண்ணப்பம் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்; ஆபாச படங்கள் அனுப்பிய எஸ்.பி ...
கோவை செம்மொழி பூங்கா விதிமீறல் புகார் - டென்ஷன் ஆன நேரு, செந்தில் பாலாஜி
கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.212 கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா கட்டப்பட்டு வருகிறது. 1,000 பேர் அமரக்கூடிய அரங்கம், நூற்றுக்கணக்கான தாவர வகைகள், செயற்கை நீர் வீழ்ச்சியுடன் மலைக் குன்று, வன விலங்குகள் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற நவம்பர் 25-ம் தேதி திறந்துவைக்கிறார். பெரும்பாலான பணிகள் முடிவடையாத நிலையில், தேர்தல் காரணமாக அவசர அவசரமாக பூங்கா திறக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதற்காக மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள், ஊழியர்களையும் செம்மொழி பூங்கா பணிகளுக்கு முடுக்கிவிட்டுள்ளதாகவும், விதிமீறல் நடந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகிறார்கள். இந்நிலையில் செம்மொழி பூங்கா பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது செய்தியாளர்கள் அந்தப் புகாரை பற்றி கேள்வி எழுப்பினார்கள். இதற்கு நேரு மற்றும் செந்தில் பாலாஜி பதில் அளிக்க முடியாமல் தடுமாறினார்கள்.
“பசுமை பரப்பளவு குறைவாக உள்ளதோ?”, “டெண்டர் விதிமீறல் நடந்துள்ளதாக கூறுகிறார்களே?”, “அதிகாரிகளுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்களே?” என்று அடுத்தடுத்து கேள்விகள் முன் வைக்கப்பட்டன. இதில் கடுப்பான நேரு, “வேலை மெதுவாக இருந்தால் மந்தம் என்கிறீர்கள், அவசரமாக செய்தால் முறைகேடு என்கிறீர்கள்.

ஏங்க சும்மா எங்களையே கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க.” என்றார். செந்தில் பாலாஜி, “கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் கேட்கக் கூடாது.” என்று டென்ஷன் ஆகி செய்தியாளர் சந்திப்பை முடித்து சென்றனர்.


















