செய்திகள் :

கோவை: வயிற்றில் கருவுடன் உயிரிழந்த பெண் யானை; ரயில் மோதியதில் மற்றொரு யானைக்கும் சோகம்

post image

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதி நவக்கரை அருகே பெண் காட்டு யானை உயிரிழந்திருப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

பெண் யானை
பெண் யானை

மருத்துவக் குழுவினர் யானைக்குப் பிரேதப் பரிசோதனை செய்தனர். அதில் யானையின் உடலில் எந்தக் காயங்களும் இல்லை என்று தெரியவந்தது. மேலும் இறந்த பெண் யானை கருவுற்ற நிலையில் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

அந்த யானையின் வயிற்றில் இருந்து 13 மாதங்களான சிசு எனக் கண்டறியப்பட்டது. இதே யானைதான் கடந்த வாரம் குப்பனூர் பகுதியில் சேற்றில் சிக்கியது. உயிரிழந்த யானைக்குச் சுமார் 50 வயதிருக்கும். மேலும் யானையின் உடல் உறுப்புகள் பல செயலிழந்துவிட்டன.

கோவை
கோவை

அதனால்தான் கடந்த சில வாரங்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்துள்ளது. வயிற்றில் குட்டியுடன் பெண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு – கேரளா எல்லையில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையாறு அருகே உள்ள வட்டப்பாறை பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் யஷ்வந்த்பூர் ரயில் வேகமாகச் சென்றுள்ளது.

யானை
யானை

அப்போது அந்த வழியே ஒரு யானைக் கூட்டம் தண்டவாளத்தைக் கடந்துள்ளது. இதில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க குட்டி ஆண் யானை மீது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

ECO India : வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - இந்த வார கேள்விகளுக்கு தயாரா?

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம்... மேலும் பார்க்க

விருதுநகர்: நிலநடுக்கத்தால் வீதிக்கு வந்த மக்கள்; ரிக்டர் அளவுகோளில் 3.0 ஆகப் பதிவு; என்ன நடந்தது?

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க

ECO India : வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - முழு தகவல்

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம்... மேலும் பார்க்க

ஆறு, குளங்களுடன் உயிர்ப்பெற்ற மதுரை வாடிப்பட்டி - கழுகு பார்வையில் பசுமை பேரழகு!

கழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேர... மேலும் பார்க்க

கோவை: யானைகளைத் தடுக்க எஃகு வேலி பணிகள் தீவிரம்; யானைகளால் சில கம்பிகள் சேதம் | Photo Album

எஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஎஃகு கம்பி வேலிஊட்டி: யானை - மனித எதிர்கொள்ளல்களைத... மேலும் பார்க்க