நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ. 30 கோடியில் ஹெலிகாப்டர்; சுகேஷ் வழங்கிய காத...
'சங்குப்பூ கொழுக்கட்டை, நரிபயிறு சாலட், திக்குடி ஆட்டுக்கால் கிரேவி' சேலத்தில் சமையல் சூப்பர் ஸ்டார்
சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், அவள் விகடன், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர் ஆகியவை இணைந்து வழங்கும் “உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடை” என்ற தலைப்பிலான அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3 போட்டி, புதுச்சேரி மற்றும் வேலூரைத் தொடர்ந்து, சேலம் செளடேஸ்வரி மகளிர் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டிக்கு பிரபல சமையல் கலைஞர் தீனா நடுவராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், சேலம் நகரம், நாமக்கல், சங்ககிரி, தர்மபுரி, கோவை, ஈரோடு மற்றும் கேரள மாநிலத்தின் திருவனந்புரம் மற்றும் சேலம் நகரைச் சுற்றியுள்ள அன்னதானப்பட்டி, லைன்மேடு, அழகாபுரம், தாதகாப்பட்டி, , தாசநாயக்கன்பட்டி, மல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 90 பேர் கலந்து கொண்டனர். இரண்டு சுற்றுகளாக நடைபெறும் போட்டியின், முதல் சுற்றில் போட்டியாளர்கள் வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்திருந்த உணவுகளை காட்சிப்படுத்தினர்.

தினை, ராகி கேக், செவ்வாழைப்பழம் கேக், இளநீர் சாதம், கருவேப்பிலை, முருங்கை கலந்த மல்லி ஃப்ரைட் ரைஸ், பெப்பர் தயிர் சட்னி, உளுந்து புட்டு, ராகி தோசை, விளாம்பழம் அல்வா, ஹோம்மேட் சவான், பிராஸ் இந்தூரி பீத்தா, நரி பயிறு சாலட், அகத்திக்கீரை மருந்துக் குழம்பு, அரவணை பாயாசம், அஸ்திரம், சிகப்பு அரிசி கஞ்சி, சங்குப்பூ கொழுக்கட்டை, சுக்கு லேகியம், இன்சுலின் இலை சூப், முள்முருங்கை பொடி, லெமன் புட்டிங், ஏபிசி மால்ட் புட்டிங், தேங்காய் புட்டிங், காலிஃப்ளவர் பபுல்ஸ், சிக்கன் இலை பரோட்டா, சிக்கன் கப்சா, தானியா புலாவ், ஆரிய பால் சிக்கன் கிரேவி காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அரேபியன் புட்டிங், புளிச்சக்கீரை சாதம், உக்காணி புலாவ், திக்குடி ஆட்டுக்கால் கிரேவி, சுரைக்காய் சப்பாத்தி, முந்திரி கிரேவி, நல்லம்பட்டி சிக்கன், பனங்கிழங்கு புட்டு, பிடி கொழுக்கட்டை, இந்தூர் போகா, நாக்பூர் சாபுதானா போன்ற பல்வேறு வெளிமாநில மற்றும் அண்டை நாடுகளின் உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் சிறுவர்களும் தாங்கள் சமைத்த உணவினை காட்சிப்படுத்தினர். சமையல் கலைஞர் தீனா உணவை ருசிபார்த்து மதிப்பெண் வழங்கினார். இதில்,தேர்வு செய்யப்படுபவர்கள் அடுத்தகட்டமாக நடைபெறும் ‘லைவ் கிச்சன்’ சமையல் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில், தேர்வாகும் போட்டியாளர்கள் சென்னையில் நடைபெறும் இறுதிச்சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.














