ஆற்காடு: "அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்திக் கொடுங்க" - தவெக அமைச்சர்களைச் சந்...
"சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக கூட்டணி அமைச்சரவை!" - பாராட்டிய மாரி செல்வராஜ்
தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்றைய தினம் 23 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
தவெக ஆட்சியமைத்ததற்கு வெளியிலிருந்து ஆதரவு என்கிற நிலைப்பாட்டைத் தொடர்ந்து தற்போது தவெக அமைச்சரவையில் விசிக, ஐ.யு.எம்.எல் இடம்பெற்றிருக்கிறது.
திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு, பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் இன்று அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி அமைச்சரவையை அமைத்திருக்கும் முதல்வர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்து, அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்
விசிக-வை விமர்சித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா போட்ட பதிவிற்குப் பல்வேறு பக்கங்களிலிருந்தும் கண்டனங்கள் வலுத்தன.
இயக்குநர் மாரி செல்வராஜ், "சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எனது நன்றிகளையும் பெரும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தமிழ்நாட்டின் முதல்வர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எனது நன்றிகளையும் பெரும் பாராட்டுதலையும்…
— Mari Selvaraj (@mari_selvaraj) May 22, 2026
மேலும் பெரும் எதிர்பார்ப்போடு இந்த அமைச்சரைவியில் இடம்பெற்றிருக்கும் இளம்தலைமுறை அமைச்சர்களுக்கும் பெரும் கனவோடு இடம்பெற்றிருக்கும் பட்டியலின மற்றும் சிறுபான்மை அமைச்சர்களுக்கும், பெரும் இலக்கோடு இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சி அமைச்சர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பிரியங்களையும் பகிர்ந்துகொள்கிறேன். மக்கள் பணிகள் சிறக்கட்டும்." எனப் பதிவிட்டிருக்கிறார்.














