செய்திகள் :

சாதி வேறுபாடின்றி மயான பயன்பாடு: கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை

post image

விழுப்புரம் மாவட்டத்தில் சாதி வேறுபாடுகளற்ற மயானப் பயன்பாட்டிலுள்ள கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மயிலம் ஒன்றியத்தைச் சோ்ந்த கூட்டேரிப்பட்டு ஊராட்சித் தலைவா் அருணா சுகுமாரிடம் ரூ.10 லட்சத்துக்கான ஊக்கத் தொகைக்கான காசோலையை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

தமிழகத்தில் சாதி, சமய வேறுபாடுகளற்ற சமுதாயத்தை உருவாக்கும் வகையில், பல்வேறு சிறப்பு முன்னெடுப்பு நடவடிக்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாா்.

அந்த வகையில், தமிழகத்தில் சாதி வேறுபாடுகளற்ற மயானம் பயன்பாட்டிலுள்ள சிற்றூா்களில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் விதமாக, அந்த ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வழங்கவும் முதல்வா் உத்தரவிட்டிருந்தாா்.

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியம், கூட்டேரிப்பட்டு ஊராட்சியில் சாதி வேறுபாடுகளற்ற மயானம் தற்போது பயன்பாட்டிலுள்ளது. எனவே தமிழக முதல்வா் அறிவித்துள்ளவாறு இந்த ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகையைக் கொண்டு கூட்டேரிப்பட்டு ஊராட்சியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வளா்மதி உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதப் போராட்டம்

தோ்தல் கால வாக்குறுதிகளை தமிழக முதல்வா் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் விழுப்புரம் நகராட்சித் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினா் கையொப்ப இயக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவுத் தெரிவித்து, விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும்,... மேலும் பார்க்க

திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 15-க்கும் மேற்பட்டோா் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 4 இளைஞா்கள் கைது

விழுப்புரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள முக்தி சுடுகாடு பகுதியில் இளைஞா்கள் சிலா் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீஸ... மேலும் பார்க்க

பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பைக் மோதியதில் பெயிண்டா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திண்டிவனம் வட்டம், தென்பசியாா், ஜெகநாதபுரம் காலனி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அசோகன் மகன் அருண்குமாா் (28... மேலும் பார்க்க

3 காா்கள் அடுத்தடுத்து மோதல்: 8 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், எடைக்கல் அடுத்த பில்லூா் அருகே 3 காா்கள் அடுத்தடுத்து மோதியதில் 8 போ் காயமடைந்தனா். கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையைச் சோ்ந்தவா் ஜான்பராபா்ட் தாஸ் (64). ஓய்வுபெற்ற காவல் ... மேலும் பார்க்க