செய்திகள் :

சாத்தூர் : நடத்தையில் சந்தேகம்; கணவனின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்திக் கொன்ற மனைவி கைது!

post image

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் அட்டைப் பெட்டித் தயாரிப்பு நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள அப்பனேரி பகுதியைச் சேர்ந்த திவ்யபாரதி   என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, சங்கராபுரத்தில் வாழ்ந்து வந்தனர்.

கைது செய்யப்பட்ட திவ்யபாரதி - கொலை செய்யப்பட்ட மணி

இவர்களுக்குக் குழந்தைகள் கிடையாது. மனைவி திவ்யபாரதியின் நடத்தையில் சந்தேகமடைந்த மணி, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.  மணிக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. மதுபோதையிலும் மனைவியிடம் தகராறு செய்வதும் அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்தும் வந்துள்ளனர். வழக்கம் போல் நேற்று இரவு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திவ்யபாரதி தள்ளிவிட்டதில் மணி கீழே விழுந்து இறந்ததாக உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இன்று காலை மணியின் மரணம் குறித்துத் தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீஸார்,   மணியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆரம்பத்தில், சண்டையின் போது தான் தள்ளிவிட்டதில் மணி வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாகத் திவ்யபாரதி போலீஸாரிடம் கூறியுள்ளார். ஆனால், அவரது பேச்சில் சந்தேகமடைந்த போலீஸார், திவ்யபாரதியிடம் விசாரணை நடத்தினர்.

சாத்தூர் தாலுகா காவல் நிலையம்

சண்டையின் போது மணியைக் கழிவறைக்குள் தள்ளிவிட்டு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரது தலை, தொடை மற்றும் மர்ம உறுப்பில் குத்தியதில், நீண்ட நேரம் ரத்தம் வெளியேறி மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனத் தெரியவந்தது. இதனையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார்  திவ்யபாரதியைக் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை: சிங்கப்பெண் படை விழிப்புணர்வு நிகழ்ச்சி; புகார் அளித்த மாணவிகள்- 3 பேர் மீது பாய்ந்த போக்சோ

நெல்லை அருகேயுள்ள பாலாமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினர் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் 3 மாணவிகள் தங்களுக்கு நேந்த பாதி... மேலும் பார்க்க

'ரூ.14 லட்சம் ரொக்கம்; 153 ஏ.டி.எம் கார்டுகள்; 52 செல்போன்கள்' - போலீஸாரை அதிர வைத்த கும்பல் கைது?

திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில், கே.கே.நகர் போலீஸார் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் பொருட்டு விடுதிகள் மற்றும் குடியிருப்புகளில் தீவிர சோதனையில் ஈடுபட்... மேலும் பார்க்க

திருச்சி: பாழடைந்த கிணற்றில் இரு வாலிபர்களின் உடல்; தனியாக கிடந்த தலை; சந்தேகம் கிளப்பும் உறவினர்கள்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கீழ ஆதிகுடி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் 7 அடி அகலம் 15 அடி ஆழம் கொண்ட பாழடைந்த கிணற்றில் இருந்து கடந்த சில தினங்களாக கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால... மேலும் பார்க்க

திருச்சி: 'கஞ்சா அடிக்கப் போறீங்களா?' - அதட்டிய இருவர்; விரட்டி விரட்டி வெட்டிய இளைஞர்கள்!

திருச்சி மாநகரம், கொட்டப்பட்டு பகுதியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி நாகராஜ் என்பவரின் வீட்டின் அருகில் ஜஃப்ரான், ரோஹித், மெல்வின் மோகன் ஆகிய மூவரும் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருந்துள்ளனர். இத... மேலும் பார்க்க

கிலோ கணக்கில் தங்கம்... கோடிக்கணக்கில் சொத்துகள் - DSP கைதில் அதிர்ந்துபோன அதிகாரிகள்; பின்னணி என்ன?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், தெலங்கானா காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) சங்கிரெட்டி பீம் ரெட்டி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.கடந்த மே மாதம் பீம் ரெட்டி தனது மனைவியுடன் சார்தாம் யாத... மேலும் பார்க்க

வருங்கால கணவருடன் திருமண ஏற்பாடு; காதலனுடன் ரகசியக் கல்யாணம் - சியா கோயலின் இரட்டை வாழ்க்கை ?

புனேவைச் சேர்ந்த இளம் ரியல் எஸ்டேட் அதிபர் கேத்தன் அகர்வால் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சியா கோயல், தனது வருங்கால கணவரான கேத்தனை கொலை செய்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, தனது ... மேலும் பார்க்க