செய்திகள் :

சாய் பல்லவியா? ருக்மினி வசந்த்யா? எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்கில் யார் நடிக்கலாம்? ஒரு அலசல்...

post image

இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் (Biopic) சாய் பல்லவிக்குப் பதிலாக கன்னட நடிகை ருக்மினி வசந்த் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகி இணையத்தில் பேசுபொருளானது. கௌதம் தின்னனுரி இயக்கவுள்ள இப்படத்தில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

சாய் பல்லவி vs ருக்மினி வசந்த்
சாய் பல்லவி vs ருக்மினி வசந்த்

சாய் பல்லவி இப்படத்தில் இருந்து விலகவில்லை என்றும், `ராமாயணம்' போன்ற மற்ற படங்களின் தேதிகள் காரணமாகவே படப்பிடிப்பு தாமதமாகியுள்ளது என்றும் படக்குழு தரப்பில் சமீபத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சாய் பல்லவி, ருக்மினி வசந்த் ஆகிய இருவரின் நடிப்புத் திறன், கடந்த கால கதாபாத்திரங்கள் என இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரோலுக்கு இருவருமே பொருத்தமானவர்கள்தான்.

சாய் பல்லவி

கதாநாயகியாக அறிமுகப் படம் : பிரேமம் (மலையாளம்)

முக்கியமான படங்கள்: அமரன், ஷியாம் சிங்கா ராய், கார்கி, பிரேமம்

நடிப்பு பாணி: இயல்பான நடிப்பு, கலை, உடல்மொழி சார்ந்த வெளிப்பாடு

பலம் : உணர்ச்சிகளை ஆழமாக வெளிப்படுத்துவது.

சாய் பல்லவி vs ருக்மினி வசந்த்
சாய் பல்லவி vs ருக்மினி வசந்த்

எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவி முதல் தேர்வாக இருந்ததற்கு பல வலுவான காரணங்கள் உள்ளன. சாய் பல்லவி அடிப்படையில் ஒரு சிறந்த நடனக் கலைஞர். `ஷியாம் சிங்கா ராய்' படத்தில் அவர் வெளிப்படுத்திய கிளாசிக்கல் நடன அசைவுகள், பாரம்பர்யமான தோற்றம் மற்றும் முகபாவனைகள், ஒரு பழம்பெரும் கர்நாடக பாடகியின் உடல்மொழியோடு எளிதாக ஒத்துப்போகும்.

`கார்கி' படத்தில் நடுத்தர வர்க்கத்துப் பெண்ணாக அவர் காட்டிய முதிர்ச்சியான நடிப்பு, எம்.எஸ்.சுப்புலட்சுமி தன் வாழ்க்கையில் சந்தித்த ஆரம்பக்கட்டப் போராட்டங்களையும், இசை உலகில் அவர் செய்த சாதனைகளையும் திரையில் கொண்டு வர பெரிதும் உதவும்.

சாய் பல்லவி எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்வார். இந்தப் படத்திற்காக அவர் கர்நாடக சங்கீத வகுப்புகளுக்குச் சென்று பயிற்சி பெற்றார் என்ற செய்திகளும் வந்துள்ளன. மேக்கப் இல்லாத அவரது இயல்பான தோற்றம், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் எளிமையை அப்படியே பிரதிபலிக்கும்.

சாய் பல்லவி vs ருக்மினி வசந்த்
சாய் பல்லவி vs ருக்மினி வசந்த்

ருக்மினி வசந்த்

அறிமுகப் படம்: பீர்பால் (கன்னடம்)

முக்கியமான படங்கள்: சப்த சாகரதாச்சே எல்லோ, காந்தாரா சாப்டர் 1

நடிப்பு பாணி: நுட்பமான முகபாவனைகள்

பலம்: ஆர்ப்பாட்டமில்லாத யதார்த்த நடிப்பு

ஒருவேளை ருக்மினி வசந்த் இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரிடமும் சில தனித்துவமான சிறப்பம்சங்கள் உள்ளன. எம்.எஸ்.சுப்புலட்சுமி என்றாலே அமைதியும், தெய்வீகக் களையும்தான் நினைவுக்கு வரும்.

ருக்மினி வசந்தின் முக அமைப்பு மற்றும் அவரது கண்கள், பழைய புகைப்படங்களில் நாம் பார்க்கும் எம்.எஸ்.அம்மாவின் முகச்சாயலோடு நெருக்கமாக ஒத்துப்போகிறது. பல சினிமா விமர்சகர்களும் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சாய் பல்லவி vs ருக்மினி வசந்த்
சாய் பல்லவி vs ருக்மினி வசந்த்

`சப்த சாகரதாச்சே எல்லோ' படத்தில் ருக்மினி வசந்த் காட்டிய நுண்ணிய முகபாவனைகள் மற்றும் வலியைக் கண்களாலேயே கடத்தும் விதம் ரசிகர்களை வியக்க வைத்தது. ஆர்ப்பாட்டமில்லாத, ஆழமான நடிப்புக்கு அவர் ஒரு சிறந்த உதாரணம். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஆன்மீகத் தேடலை திரையில் காட்ட இந்த நடிப்பு பாணி உதவும்.

யார் நடித்தாலும், கர்நாடக இசையின் முடிசூடா ராணியான எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் பெருமையை திரை வழியே காண்பது சினிமா மற்றும் இசை ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் விருந்தாகவே அமையும்.

இவர்களில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் அல்லது இவர்களைத் தவிர வேறு யார் எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதை கமெண்ட்டில் நீங்களும் சொல்லுங்கள்.

"முழுமையாக குணமடைய இன்னும்..." - பவன் கல்யாண் சிகிச்சை பற்றி சிரஞ்சீவி

ஆந்திராவின் துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் உடல் நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை (17.04.2026) அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை (18.04.2026) அவருக்கு அறுவை சி... மேலும் பார்க்க

"அதை முடித்துவிட்டு இரவில் பாடங்களைப் படிக்க வேண்டியிருக்கும்" - எம்பிபிஎஸ் பட்டம் பற்றி ஸ்ரீ லீலா

கோலிவுட், டோலிவுட் என இப்போது டிரெண்டிங்காக வலம் வருகிறார் நடிகை ஸ்ரீ லீலா. இவர் சமீபத்தில் அவருடைய எம்பிபிஎஸ் (MBBS) படிப்பை முடித்து மருத்துவர் பட்டம் பெற்றிருந்தார். ஶ்ரீலீலாதிரையில் நடனமாடுவதையும்... மேலும் பார்க்க

Ram Charan: ``நான் கண்டிப்பான தந்தைதான்!" - குழந்தைகள் பற்றி ராம் சரண்

டோலிவுட்டின் முன்னணி நடிகரான ராம் சரண், தற்போது புச்சி பாபு சனா இயக்கத்தில் 'பெத்தி' (Peddi) திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு க்ளின் காரா என்ற மகள் ப... மேலும் பார்க்க

Mani Sharma: "ஹார்மோனியத்தை தூடி தட்டி எடுத்தபோது.!" - கம்பேக் பற்றி பிரபல இசையமைப்பாளர் மணி சர்மா

தமிழ், தெலுங்கு என பல ஹிட் பாடல்களைத் தந்த இசையமைப்பாளர் மணி ஷர்மா. இன்றும், இவருடைய பாடல்கள்தான் பலருடைய ப்ளேலிஸ்டில் முக்கிய வைப் நம்பர்கள். Mani Sharmaடோலிவுட்டில் வெளிவந்த 'பேபி' திரைப்படத்தின் இய... மேலும் பார்க்க