`காங்கிரஸில் தொடரும் உட்கட்சிப் பிரச்னைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகிறது!' ...
சித்தப்பாவுடன் தொடர்பு... கணவனைக் கொலைசெய்த மனைவி கைது - கோவையில் `பகீர்!'
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவா என்கிற ரதீஷ் (27). ரதீஷ் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கும் இந்திராணி (26) என்கிற பெண்ணுக்கும் சமூகவலைதளத்தில் பழக்கமாகி, காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு 3 வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே கடந்த சில வாரங்களாக ரதீஷைக் காணவில்லை என்ற அவரின் தாயார் சுசீலா கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு கேமராவில் ரதீஷின் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் வந்து சென்றது கண்டறியப்பட்டது. இதனிடையே இந்திராணி காவல்துறையில் சரணடைந்து காவல்துறையிடம் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

``எனக்கும், கரூரில் பணியாற்றி வரும் என் சித்தப்பா வினோத்துக்கும் (35) பழக்கம் ஏற்பட்டது. இதற்கு ரதீஷ் தொந்தரவாக இருந்தார். எங்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
ரதீஷை தீர்த்துகட்ட முடிவு செய்தோம். இதற்காக வினோத் தன் நண்பர்கள் சுரேஷ் மற்றும் பாபு ஆகியோரை அழைத்து வந்தார். எங்கள் வீட்டில் வைத்து ரதீஷை கொலைசெய்து, பாபுவின் ஆம்புலன்ஸ் மூலம் உடலை கரூர் ரயில்வே தண்டவாளம் அருகே போட்டுவிட்டோம்.
ரதீஷ் ரயில் மோதி உயிரிழந்தது போல காட்ட திட்டமிட்டோம். அதற்குள் காவல்துறையினர் கண்டறிந்துவிட்டனர்" என்றார். காவல்துறையினர் இந்திராணி, வினோத், சுரேஷ், பாபு ஆகிய 4 பேரைக் கைதுசெய்தனர்.

















