"திரையரங்குகளில் சாமியாடுபவர்களுக்கு அன்போடு உதவுங்கள்!" - ஆர்.ஜே. பாலாஜி வேண்டு...
``சின்னப் படங்களை எடுப்பவர்கள்தான் சினிமாவில் 'சிறுபான்மை' மக்கள்; முதல்வர் விஜய்.! - பார்த்திபன்
‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களின் இயக்குநர் மீரா கதிரவனின் அடுத்த எதார்த்த படைப்பான 'ஹபீபி' படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (17.05.2026) நடைபெற்றது.

கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படம், வருகிற மே 28-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இந்த திரைப்படை தொடர்பான விழாவில் பேசிய இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், "காசு சம்பாதிப்பதை விடக் கலையை நேசித்து மீரா கதிரவன் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் கேமராவுக்கு முன்னால் நடிகர்கள் நடித்தது போலவே தெரியவில்லை.
இயக்குநர் கஸ்தூரி ராஜா வீட்டில் எப்படி இயல்பாக இருப்பாரோ, அதேபோல இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார்." என்றவர், முதல்வர் விஜய் குறித்து, "தனிமனித நம்பிக்கையால் சாதித்துக் காட்டியுள்ள நம் ஊர்ப் பிள்ளை முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்.
200 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு, இன்று ஒரு அரசு ஊழியரைப் போலக் காலை முதல் மாலை வரை மக்களுக்காக அவர் உழைப்பது பிரமிப்பைத் தருகிறது.

சினிமாவில் 'சிறுபான்மை மக்கள்' என்றால் சின்னப் படங்களை எடுப்பவர்கள்தான். தியேட்டர்கள் கிடைக்காமல், படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் அவர்கள் சந்திக்கும் போராட்டங்கள் அதிகம்.
எனவே, முதல்வர் விஜய் தலைமையிலான இந்த அரசாங்கம், திரையரங்கு கிடைக்காமல் தவிக்கும் இதுபோன்ற நல்ல சின்ன படங்களுக்கு நிச்சயம் உதவ வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து இயக்குநர் சேரன் பேசுகையில், "நேத்து படம் பார்த்தேன், இப்ப வரைக்கும் என்னால அந்தப் படத்திலிருந்து வெளியே வரவே முடியல. ஒரு முஸ்லிம் கிராமத்துக்குள்ள கூட்டிட்டு போய், என் பெயரை நான் சம்சுதீனாக ஃபீல் பண்ற மாதிரி செய்திருக்காங்க.

இது ஒரு நாவல் மாதிரி பிரமாதமான வாழ்வியல் படைப்பு. இப்படிப்பட்ட படங்களை எடுக்கத்தான் ஒவ்வொரு இயக்குநரும் சென்னையை நோக்கி வரணும். படம் பார்த்தா கண்டிப்பா தூக்கம் வராது. நேத்து நைட் சுத்தமா தூங்கல. என்கிட்ட நானே பேசிட்டே இருந்தேன்!" என்றார்.









.jpeg)





