செய்திகள் :

"சிறுபான்மையினர் வாக்குகளை அவ்வளவு எளிதாகக் கவர முடியாது" - விஜய்யை விமர்சிக்கும் கருணாஸ்

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகும் அக்கட்சியின் வேட்பாளர்களை இன்று அறிவித்திருக்கிறார்.

234 தொகுதிகளில் தனித்து களம் காண்கிறது தவெக. பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் விஜய்.

அவர் வேட்பாளர்கள் அறிவித்ததைப் பற்றியும், அவர் திமுக கூட்டணியை விமர்சிப்பது பற்றியும் நடிகரும், முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ் செய்தியாளர்களிடையே பேசியிருக்கிறார்.

விஜய் - தவெக வேட்பாளர்கள்
விஜய் - தவெக வேட்பாளர்கள்

கருணாஸ் பேசுகையில், "இந்தக் கூட்டணியை விமர்சிப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். கட்சியின் தலைவராகக் குறிப்பிட்ட வாக்குகளைத் திட்டமிட்டு அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

அவருடைய பெயரை ஜோசப் விஜய் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், அவரை விஜய் என்றுதான் நமக்கு தெரியும். இன்றுதான் அவர் ஜோசப் விஜய் எனச் சொல்லியிருக்கிறார்.

ஆனால், சில காலத்திற்கு முன்பு அவருடைய தந்தையார் எஸ்.ஏ. சந்திரசேகர் தாய் மதத்திற்குத் திரும்பிவிட்டதாகச் சொல்லியிருந்தார். அப்போது இவர் என்ன என்கிற கேள்வியும் இருக்கிறது. இன்னும் ஆழமாக இதற்குள் செல்லலாம்.

ஆனால், நீங்கள் ஒரு கட்சியின் தலைவர். அதன் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். சிறுபான்மையினர் வாக்குகளை அவ்வளவு எளிதாகக் கவர முடியாது.

கருணாஸ்
கருணாஸ்

ஆனால், மக்களுக்காக தவெக குரல் கொடுத்திருக்க வேண்டும். இன்று கிறிஸ்துவர் என அடையாளப்படுத்திக் கொள்ளும் அவர், இத்தனை ஆண்டுகளில் அந்த மக்களோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் நிகழ்வு நடத்தியிருக்கிறாரா?

மக்களோடு மக்களாக நின்று போராடக் கூடியவர்களுக்குத்தான் மக்கள் அங்கீகாரம் கொடுப்பார்கள். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி தொடரும். இதற்கு முக்குலத்தோர் புலிப்படை உறுதுணையாக இருக்கும்.

நிச்சயமாக, மக்கள் அவர்களுக்குப் பிடித்த சிலருக்கு வாக்களிக்கத்தான் செய்வார்கள். அவர்களுடைய சாதி, மத பின்புலம் வைத்துதான் வாக்களிக்கிறார்கள். இதனால் மதசார்பற்றக் கூட்டணியின் வாக்கு பாதிக்கப்படாது என்பதை உறுதியாக கூறுகிறேன்" எனக் கூறியிருக்கிறார்.

`சாதி, மதமற்றவர்' சான்றிதழ்; நடைமுறை எதார்த்தமும் சட்டச் சிக்கல்களும் - ஓர் ஆழமான அலசல்!

நடிகர் பார்த்திபன் ஹைதராபாத் நிகழ்ச்சியில் தனது சாதி குறித்துப் பேசியது விமர்சனத்திற்குள்ளான நிலையில், தான் ஒரு 'சாதி, மதமற்றவர்' என அறிவிக்கக் கோரி வேளச்சேரி வட்டாட்சியரிடம் மனு அளித்தார். பின்னர் இத... மேலும் பார்க்க

'Full' பாதுகாப்பு: இனி யாரும் ஆன்லைன் மோசடியில் ஏமாறமாட்டார்கள்?' - RBI-ன் புதிய முயற்சி

தொழில்நுட்பம் அப்டேட் ஆக... ஆக, இன்னொரு பக்கம், ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும், வகைகளும் நீண்டுகொண்டே போகின்றன. இந்த மோசடிகளுக்குப் பெரியவர்கள், சிறியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என எந்த வித... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாகன பேரணி; மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு | Photo Album

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குகளை உறுதி செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சரவணன் பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரசாரங்க... மேலும் பார்க்க

20 பேர் பலியான சத்தீஸ்கர் ஆலை விபத்து: வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால் மீது வழக்குப் பதிவு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா மின் நிலையத்தின் கொதிகலனில் (boiler) ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, வேதாந்தா ரிசோர்சஸ்... மேலும் பார்க்க

VIP பணிகளுக்காக முடக்கப்பட்ட ஆம்புலன்ஸ்?: 'பறிபோன ஊடகவியலாளர் உயிர்' - பகீர் குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேசத்தில் 'ஸ்வர்ண் மங்கலம்' (Swarn Mangalam) என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் தீபக் சோனி. இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று ரைசெனில் நடைபெற்ற ஒரு விவசாயக் கண்காட்சியில் கலந்துகொள்... மேலும் பார்க்க

சரிவிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பு மீண்டது எப்படி? போர் நிறுத்தம் மட்டும் காரணமல்ல

சில மாதங்களாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டு இருந்தது.கடந்த 30-ம் தேதி, இந்திய ரூபாயின் மதிப்பு இன்ட்ரா டேயில் ரூ.95-ஐ கூட தொட்டது. இது வரலாற்றின் புதிய வீழ்ச்சி. இந்த நிலைமையெல்லாம் இப்போது... மேலும் பார்க்க