செய்திகள் :

சிறு குறு, பெரு விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு! - யாருக்கு எவ்வளவு? முழு விவரம்!

post image

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீட்டு அறிக்கையில், ``தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் வி. காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் என். மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

வேளாண்மை

இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025-ம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பயிர்க்கடன் தள்ளுபடி விவரங்கள்

கடன் தொகை குறு விவசாயிக்கான தள்ளுபடி கடன் தொகை (ரூபாயில்)சிறு விவசாயிக்கான தள்ளுபடி கடன் தொகை (ரூபாயில்)50,000 வரை கடன் தொகை முழுவதும் (100%) தள்ளுபடி செய்யப்படுகிறது.

50,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 50,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு, அவர்கள் பெற்ற கடன் தொகை முழுவதும் (100 சதவீதம்) முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே அளவில் (50,000 ரூபாய் வரை) கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு, அவர்கள் பெற்ற கடன் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

50,001 முதல் 60,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 50,001 முதல் 60,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 40,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே வரம்பில் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 20,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

கோப்புப்படம்
கூட்டுறவு வங்கி

60,001 முதல் 70,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 60,001 முதல் 70,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 30,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே வரம்பில் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 15,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

70,001 முதல் 80,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 70,001 முதல் 80,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 20,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே வரம்பில் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

80,001 முதல் 90,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 80,001 முதல் 90,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே வரம்பில் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

90,001 முதல் 1,00,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 90,001 முதல் 1,00,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதே வரம்பில் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

தவெக விஜய்
தவெக விஜய்

1,00,000 ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்கள்:

  • குறு விவசாயிகள்: 1,00,000 ரூபாய்க்குக் கூடுதலாகப் பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 5,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்.

  • சிறு விவசாயிகள்: இதேபோல் 1,00,000 ரூபாய்க்குக் மேல் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கும் 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.

கூடுதல் விவரங்கள்:

மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்." என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`மேட்டூர் அணை வரலாற்றில் ஏற்பட்டுள்ள 62-வது ஆண்டு காலதாமதம் இது!' - அதிகாரிகள் சொல்வதென்ன?

காவிரி ஆற்றுப்படுகை பாசனத்தின் அடிப்படை ஆதாரமாகப் பங்காற்றி வருகிறது மேட்டூர் அணை. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரால் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் குறுவை, சம்பா, தாளடி எ... மேலும் பார்க்க

சிங்கப்பெண் திட்ட வீடியோ சர்ச்சை: அமைச்சர் ராஜ் மோகன் சொல்லும் விளக்கம் என்ன?| Live Updates

லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்ற அமைச்சர் வன்னி அரசு!வன்னி அரசுசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் வன்னி அரசு. சிம்பொனி இசையமைத்து சாதனை நிகழ்த்திய இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்றார். அப்போது,``தமிழ... மேலும் பார்க்க

``கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும்..." - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபனைச் சந்தித்து கோரிக்கை ம... மேலும் பார்க்க

ஈரோடு: பெண்கள், மாணவிகளைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! - Album

ஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில... மேலும் பார்க்க

மீண்டும் உயரும் அத்தியாவசியப் பொருள்களின் விலை; லாரி வாடகை உயர்வும் சங்கிலித் தொடரான சிக்கல்களும்!

World Inequality Lab அறிக்கையின் படி இந்தியாவில் 10 சதவிகிதப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே... இருக்கும் நிலையில், நடுத்தர வர்கத்தினரும், ஏழைகளும் தங்களின் அன்றாட வாழ்... மேலும் பார்க்க

C-295: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராணுவ விமானம்; `Make in India’ வரலாற்றுச் சாதனை!

இந்திய ராணுவத்தின் போக்குவரத்து தேவைகளுக்காக பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய 'ஆவ்ரோ-748' (Avro-748) ரக விமானங்களுக்குப் ஓய்வளித்துவிட்டு, அதிநவீன வசதிகள் கொண்ட 56 புதிய C-295 போக்குவரத்த... மேலும் பார்க்க