செய்திகள் :

`சில்லறை பசங்களை வைத்துக் கொண்டு, அவமானப்படுத்துகிறார்..!" - அன்புமணி குறித்து மனம் நொந்த ராமதாஸ்

post image

சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியது, "எனக்கு இருக்கிற ஆதங்கத்தை கொட்டி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஒரு மணி நேரம் தேவை. இடையில் நான் பேசியிருக்கலாம். ஆனால் நீங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன். பொதுக்குழுவில் அதிகம் எதிர்பார்த்து வந்திருப்பது எந்த கூட்டணி. ஐயாவுக்கு அதிகாரம் கொடுத்து விட்டோம். ஐயா இப்போதே அறிவிப்பாரா… அடுத்த ஆண்டில் அறிவிப்பார் என ஆவலுடன் இருக்கிறீர்கள். நீங்கள் ஊர் திரும்பியதும், அங்கிருப்பவர்கள் கேட்பது எந்த கட்சியுடன் கூட்டணி என்று கேட்பார்கள். அந்த கூட்டணி நிச்சயம் வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என சொல்லுங்கள். சின்ன பையன் கூட கேட்கிறான் 10.5 எப்போது வரும் கேட்கிறார்கள். அது நிச்சயம் வரும். ஒரு குழு, ஒரு கூட்டம், ஒரு கும்பல் அவர்கள் எல்லாம் நான் வளர்த்த பிள்ளைகள். நான் பொறுப்பு கொடுத்த பிள்ளைகள்தான், ஆனால் இப்போது மிக மோசமாக தூற்றுகிறார்கள். என்னையும் ஜி.கே.மணியையும் தூற்றுகிறார்கள். சமீபமாக தூக்கமே இல்லை. அதையும் மீறி தூங்கும் போது என்னுடைய தாய் கனவில் வந்தார்கள்.

`ஏனப்பா இப்படி இருக்கிறீர்கள்...' என கேட்டார்கள். `உன்னுடைய பேரன்….(அழுதபடி பேசுகிறார்) ஒரு பையன் பதிவிடுகிறான், கழுத்தில் துணி போட்டு கொல்ல வேண்டும் என்று பதிவு போட்டவருக்கு அன்புமணி பதவி தருகிறார்.' எனக் கூற, அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்றதற்கு, `உன் வளர்ப்பு அப்படி' என்று தாய் கூறினார். சரிதான் ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு என்ன செய்வானோ அதையெல்லாம் செய்து விட்டேன். என்ன குறை வைத்தேன். எதுவும் இல்லை.

சென்னையில் ஒரு குடும்பத்தில் சொத்து தகராறு… தகப்பனை 30 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்து விட்டான், ஒரு பிள்ளை. அப்படி செய்திருந்தால்கூட நான் போய் சேர்ந்திருப்பேன். ஆனால் ஒவ்வொரு நாளும், சில்லறை பசங்களை வைத்துக் கொண்டு, அவமானப்படுத்துகிறார். அவர்களுக்குப் பதவி கொடுத்ததும் என் தவறுதான். ஜி.கே.மணி நொந்து போய் சொல்கிறார், `ஒன்று நான் காணாமல் போய்விட வேண்டும். இல்லையென்றால் சாகத்தான் வேண்டும். 30 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தற்கு இதுதான் நிலை' என்றதும் எனக்கு கஷ்டமாகி விட்டது. இப்போது என்னை நேரடியாகத் தாக்கத் தொடங்கி விட்டார்கள். தமிழக மக்கள் அனைவரும் எனக்கு சொந்தம்தான்... உறவினர்கள். அவர்கள் எல்லாம் எப்போதும் நேசிப்பவர்கள். மருத்துவர்களைப் போய் பார்த்தால், `அன்புமணி ஏன் இப்படிச் செய்கிறார். 5, 6 வருடங்கள் பொறுக்கக் கூடாதா?' என நிறைய பேர் கேட்கிறார்கள். அவரை மாற்ற முடியாது என நான் சொல்லி விட்டேன். ஆனால் இப்போது நடக்கிற செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக் குழு எல்லாம் பார்க்கும்போது நூற்றுக்கு 95 விழுக்காடு பாட்டாளி மக்கள் என் பின்னால்தான் இருக்கிறார்கள். அன்புமணி பின்னால் 5 விழுக்காடு பேர்கூட இல்லை. ஆனால் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவு செய்து பம்மாத்து வேலை செய்து வருகிறார்.

மருத்துவர் ராமதாஸ்

இந்த தேர்தலில் அன்புமணிக்கு சரியான பதில் கிடைக்கும். வரும் தேர்தலில் நல்ல கூட்டணியை அமைப்பேன். அந்தக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். என் பின்னால் பல ஆண்டுகளாக இருக்கும் மக்கள், என்னை எப்போதும் கைவிட்டதில்லை. உனக்கு யார் இருக்கிறார்கள்? 5 பேர்கூட இல்லை. என்னைப் போல தகப்பன் வேறு யாருக்காவது கிடைப்பார்களா... எல்லாம் யாரால் கிடைத்தது. இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. எந்தப் பதவிக்கும் நான் ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட்டிருந்தால் இந்திய அளவில் பெரிய பதவிகளுக்கு வந்திருப்பேன். சத்தியம் காரணமாகவே எனக்கு விருப்பமில்லை. அந்த சத்தியம் காரணமாகவே அன்புமணி பதவிக்கு வந்தார். உனக்கு என்ன குறை வைத்தேன். கஷ்டப்பட்டு ஒரு மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி அமைப்பேன். அந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைத் தரும் என நான் உறுதியாக நம்புகிறேன். நான் நினைப்பது நிச்சயம் நடக்கும். அப்படிப்பட்ட சூழல் இப்போது வந்திருக்கிறது. சில நேரங்களில் தூக்க மாத்திரை போட்டால்கூட தூக்கம் வந்து விடுகிறது. அன்புமணியை நினைத்தால் தூங்க முடியவில்லை. பாட்டாளி சொந்தங்களை நினைக்கும்போது தூங்கி விடுகிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது 500 பேர் என்னை சந்திப்பதால் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை" என்று கூறினார்.

DMDK: திமுக, அதிமுக, தவெக... யாருடன் கூட்டணி? தேமுதிகவின் திட்டம் தான் என்ன?

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2026) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரச்சாரம், பொதுக்கூட்டம் த... மேலும் பார்க்க

பல்லடம்: 1.5 லட்சம் பெண்கள்... கறுப்பு, சிவப்பு டிரெஸ் கோடு; செ.பா-வின் மகளிர் மாநாடு ஏற்பாடுகள்!

2026 சட்டமன்றத் தேர்தல் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் கடந்த காலங்களில் தோல்வியைச் சந்தித்ததால், இந்த முறை திமுக அந்தப் பகுதியில் வெற்றி பெற அதிக கவனம் ச... மேலும் பார்க்க

பாமக: ``என்னை 20 - 30 துண்டுகளாக கூட வெட்டி வீசியிருக்கலாம்" - மேடையில் கண்ணீர்விட்ட ராமதாஸ்

பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று (டிச. 29) காலை தொடங்கி நடைபெற்றுவருகிறத... மேலும் பார்க்க

பாமக: "ஐயா ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்குச் சமம்" - ஸ்ரீகாந்தி காட்டம்

பா.ம.க கட்சியில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், சேலத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் இன்று (... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: பவார் குடும்பத்தை ஒன்றுசேர்த்த அதானி; சரத்பவாருடன் கூட்டணி சேரும் அஜித்பவார்

சரத்பவாரின் சொந்த ஊரான பாராமதியில் நடந்த நிகழ்ச்சியில் அஜித்பவாரும், சரத்பவாரும் தங்களது குடும்பத்தோடு ஒன்றாகக் கலந்து கொண்டனர்.பாராமதியில் முதல் ஏ.ஐ. சென்டர் திறப்பு விழா நடந்தது. இதனை அதானி நிறுவனம்... மேலும் பார்க்க

பாஜக: நயினார் கான்வாய்க்கு கறுப்புக் கொடி காட்டினாரா அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகி? பின்னணி என்ன?

'தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று மாலை வருகை த... மேலும் பார்க்க