செய்திகள் :

சிவகாசி: பள்ளி அருகே பட்டாசு ஆலைகள், கடைகளுக்கு அனுமதி; விபத்து அபாயத்தால் பயத்தில் பெற்றோர்கள்

post image

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் உட்பட மாவட்டங்கள் முழுவதிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் உள்ளன. இதில், சிவகாசியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பட்டாசுக் கடைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பட்டாசுக் கடைகளில் தீபாவளி விற்பனைக்காக 3 மாதங்கள் மட்டும் 50 சதவீதக் கடைகள் இயங்கும். 20 சதவீதக் கடைகளில் ஆண்டு முழுவதும் பட்டாசு விற்பனை நடைபெறும். 30 சதவீத பட்டாசுக் கடைகள் பூட்டியே கிடக்கின்றன.

சிவகாசி
சிவகாசி

பூட்டிக் கிடக்கும் பல பட்டாசுக் கடைகளில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை ஸ்டாக் வைத்துள்ளனர். பட்டாசு ஸ்டாக் வைப்பதற்காகவே சிலர் பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வாங்கி வைத்துள்ளனர். குறிப்பாக, சில பகுதிகளில் உள்ள பட்டாசுக் கடைகளில் வெளியே பூட்டுப்போட்டு உள்ளே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றன. பட்டாசுக் கடைகளுக்கு தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது.

இருந்தபோதிலும், அனுமதி வாங்கும்போது ஒரு நிலையில் கடை இருந்தாலும், அனுமதிக்குப் பின்னர், கடைகளில் விதிமுறைகளை மீறி செட் அமைப்பது, இருப்பு அதிகமாக வைப்பது எனச் சிவகாசி பகுதியில் இயங்கும் பல்வேறு கடைகளில் விதிமுறைகள் மீறல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு பட்டாசுக் கடை வைக்க அரசின் அனுமதி வழங்கப்படுகிறது.

பட்டாசு தயாரிப்பு
பட்டாசு தயாரிப்பு

இதில், முறையாக லைசன்ஸ் பெற்று இயங்கும் கடைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன. மற்ற கடைகள், லைசன்ஸ் இல்லாமலேயே விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அனுமதி இன்றி இயங்கும் பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

சிவகாசியில் பல பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்களை முறையாகப் பின்பற்றாமல் கடைகள் அமைக்கப்படுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. இதுபோன்று கடைகளுக்கு அனுமதியும் அளிப்பதால் விபத்து ஏற்படுகிறது.

சிவகாசி அருகே மாரனேரியில் தனியார் பள்ளிக்கூடம் அருகே சுமார் 200 மீட்டர் தூரத்திற்குள் 10-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பட்டாசுக் கடைகளின் அருகில் பட்டாசு ஆலைகளும் இயங்கி வருகிறது.

இந்தப் பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசுக் கடைகளில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டால் அப்பள்ளியில் கல்வி பயிலும் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள்.

பள்ளி அருகில் பட்டாசு ஆலை கட்டிடங்கள்
பள்ளி அருகில் பட்டாசு ஆலை கட்டிடங்கள்

இதனால் பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். பட்டாசுக் கடைகள் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளில் சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிமேல் இதுபோன்று பள்ளிகள் அருகில் பட்டாசு ஆலை மற்றும் பட்டாசுக் கடைகள் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது எனப் பெற்றோர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானாமதுரை: `காவல்துறையினர் கண்களைக் கட்டி, காலை அடித்து உடைத்தனர்!' - வெளியான ஆகாஷ் வாக்குமூலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை - கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன். பொறியியல் பட்டதாரியான இவர், பக்கத்து ஊரில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர்களைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறி, மா... மேலும் பார்க்க

பெங்களூரு: 'போலி CBI, 69 நாள் டிஜிட்டல் கைது' - 94 வயது முதியவர் ரூ.5 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?

நாட்டில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் கும்பங்களின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சைபர் குற்றங்களைத் தடுக்க ஒவ்வொரு மாநிலமும் தனி சைபர் பிரிவு போலீஸ் படையை ... மேலும் பார்க்க

ஈரோடு: `பட்டியல் சாதியினருக்கு திருமண மண்டபம் தர மறுத்த விவகாரம்' - வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் டால்பின் என்ற பெயரில் தனியார் திருமண மண்டபம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மண்டபத்தில் தன்னுடைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துவதற்காக அதே பெருந்துறையைச் சேர்ந்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: முதியவரைக் கொன்று மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ்

75 வயது முதியவரைக் கொடூரமாகக் கொலை செய்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொலைகாரனை கிருஷ்ணகிரி எஸ்.பி தலைமையில் 7 தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.Murderகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரு... மேலும் பார்க்க

நெல்லை: போதையில் தகராறு செய்த மகன்; ஆத்திரத்தில் தாய் செய்த செயல்... விபரீதத்தில் முடிந்த சோகம்!

நெல்லையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தின் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி லதா. 56 வயதான அவருக்கு கிருஷ்ணவேணி என்ற மகளும், மாயாண்டி என்ற மகனும் உள்ளனர். மாயாண்டி மது போதைக்கு அடிமைய... மேலும் பார்க்க

சென்னை: மகனின் கண் முன்னால் தாய்க்கு பாலியல் தொல்லை; தனியார் நிறுவன ஊழியர் கைது; என்ன நடந்தது?

சென்னை, கோயம்பேடு காவல் மாவட்டத்தில் 41 வயதான பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 08.03.2026-ம் தேதி மதுரவாயல் பகுதியிலுள்ள மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அந்தப் பெண் தன்னுடைய மகனு... மேலும் பார்க்க