செய்திகள் :

சி.வி.சண்முகம் அலுவலகத்தில் மீண்டும் வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்! - அதிமுக-வில் ஓயாத சலசலப்பு

post image

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையை விமர்சித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அவரது அலுவலகத்தில் மீண்டும் ஆலோசனை நடத்தி வருவது கட்சிக்குள் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், அவை நடவடிக்கைகளில் சி.வி.சண்முகம் பங்கேற்கவில்லை. அதேபோல், சட்டப்பேரவைக்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் வழக்கம்போல் எடப்பாடி பழனிசாமியுடன் காணப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி.வேலுமணி
எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி.வேலுமணி

பொதுவாக எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வரும்போதும், செய்தியாளர்களை சந்திக்கும்போதும் எஸ்.பி.வேலுமணி உடனிருப்பார். ஆனால் இன்று அது மாதிரியான காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. மேலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கும் அவர் செல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவை நடவடிக்கைகள் முடிந்த உடனேயே எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சி.வி.சண்முகம் அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம் | அதிமுக

இந்த ஆலோசனையில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அருள்மொழிதேவன், திருத்தணி ஹரி உள்ளிட்டோர் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் மாவட்டச் செயலாளர்களாக இருந்த நிலையில், அவர்களிடமிருந்து அந்த பொறுப்புகள் பறிக்கப்பட்டு இதுவரை மீண்டும் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் குறித்து சி.வி.சண்முகம் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்துவரும் சூழலில், அவரது அலுவலகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த ஆலோசனைகள் அதிமுக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

குறிப்பாக, கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் உள்கட்சி பிரச்சனை குறித்து பல்வேறு கேள்விகளை இந்த சந்திப்பு ஏற்படுத்தியுள்ளது.!

கூட்டத்தில் 9-ல் 6 எம்.பி-க்கள் ஆப்சென்ட்: மம்தா கட்சி பாணியில் பிளவைச் சந்திக்கிறதா உத்தவ் சிவசேனா?

மகாராஷ்டிராவில் சிவசேனா ஏற்கெனவே 2022ம் ஆண்டு ஒரு பிளவைச் சந்தித்த நிலையில், மீண்டும் தற்போது உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிளவைச் சந்தித்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் 9 மக்களவை ... மேலும் பார்க்க

அடுத்தகட்ட நடவடிக்கை... நகரும் சி.வி.சண்முகம்? சமாதான முயற்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாக, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் மு... மேலும் பார்க்க

`இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்!' - இலங்கை எம்.பி வலியுறுத்தல்

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், கண்டி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "​தமிழ்நாட்டில் புதிய வித்தியாசமான அணி... மேலும் பார்க்க

'ஆப்கானில் பெண்ணாகப் பிறப்பதைவிட.!' - தாலிபன் தேசத்தில் 13 நாள்கள்; இந்திய பெண்ணின் சோலோ பயண அனுபவம்

"அம்மா, அப்பா, நான் நலமாக இருக்கிறேன்." - ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான நிலப்பரப்பில் பயணம் மேற்கொண்ட ஒரு இந்திய `சோலோ பெண் இன்ஃபுளூயன்ஸர்', தனது பெற்றோருக்கு நூறு முறைக்கும் மேல் சொன்ன வாக்கியம் இது. ஒவ... மேலும் பார்க்க

`பி.எம்.ஸ்ரீ திட்டத்தை நிபந்தனைகளுடன் செயல்படுத்த கேரளம் முடிவு' - சிபிஎம்-ஐ விமர்சித்த வி.டி.சதீசன்

கேரளாவில் கடந்த முறை ஆட்சி செய்த எல்.டி.எஃப் அரசு ஏற்கெனவே மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பி.எம்-ஸ்ரீ கல்வித் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவது என்று கேரள காங்கிரஸ் முதலமைச்சர் வி.டி.சதீசன் ... மேலும் பார்க்க

'இரண்டு ஆண்டுகள் இல்லாத அளவிற்கு' ரஷ்ய எண்ணெய் நிலையங்கள் மீது உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்

நேற்று தான் ஈரான், அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதற்குள் இன்று உக்ரைன் ரஷ்யா மீது இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யாவின் செய்த... மேலும் பார்க்க