செய்திகள் :

"சீனாவுடன் 'இந்த' ஒப்பந்தம் இல்லை" - கார்னி விளக்கம்; ட்ரம்பிற்கு அஞ்சுகிறதா கனடா?

post image

சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி.

இந்தச் சந்திப்பிற்கு பிறகு, "கனடா மற்றும் சீனா - இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக தடை, வரிப் பிரச்னை ஆகியவைகளைக் குறைக்கும் 'மைல்கல்' வர்த்தக ஒப்பந்தத்தின் முதல்நிலையை அடைந்துள்ளோம்" என்று கூறினார் கார்னி.

'ஒப்பந்தம்' என்று கார்னி குறிப்பிட்டது, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்று பொருள் கொள்ளப்பட்டது.

இது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

மார்க் கார்னி - ஜி ஜின்பிங்
மார்க் கார்னி - ஜி ஜின்பிங்

ட்ரம்ப் எச்சரிக்கை

இதனால், சீனா உடன் கனடா ஒப்பந்தம் போட்டால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனடா பொருள்களுக்கும் உடனடியாக 100 சதவிகித வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார் ட்ரம்ப்.

கார்னி விளக்கம்

உடனே, ட்ரம்ப்பின் கூற்றிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ளார் கார்னி...

"சீனா உடன் எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் போடவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள அதிக வரி, வர்த்தக தடைகள் குறித்து தான் பேசியிருக்கிறோம்".

இது கிட்டத்தட்ட 'பேக்' அடித்தல் என்றே எடுத்துக்கொள்ளலாம்.

ஏன்?

அமெரிக்க வலைதளத்தின் படி, 2024-ம் ஆண்டு, கனடா தனது தயாரிப்புகளில் நான்கில் மூன்று பங்கு பொருள்களை அமெரிக்காவிற்குத் தான் ஏற்றுமதி செய்துள்ளது.

அப்படிப்பட்ட ஒரு சந்தையை நிச்சயம் கனடா இழக்க விரும்பாது என்பது தான் இந்தப் 'பேக்'கிற்கான காரணம்.

கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்!

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகியவை தேர்தலுக்கு தயாராகி வர... மேலும் பார்க்க

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது!" - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்... மேலும் பார்க்க

ராகுலா, பிரியங்காவா? - கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கரு... மேலும் பார்க்க

"அந்த போன்கால் வரட்டும்!" - காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாள... மேலும் பார்க்க

DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி... மேலும் பார்க்க

`அமித் ஷா நடிக்கலாம்; ராஜ்யசபா தேர்தலை நடத்த அவசரம் காட்டுவதற்கு இதுதான் காரணம்!' - மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாகவே மாநிலங்களவையில் காலி ஆகும் இடங்களுக்கு தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல... மேலும் பார்க்க