செய்திகள் :

சீனா கொடுத்த பரிசுப்பொருட்களை குப்பை தொட்டியில் போட்ட அமெரிக்க அதிகாரிகள்; காரணம் என்ன தெரியுமா?

post image

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீனாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் தன்னுடன் மிகப்பெரிய அதிகாரிகள் பட்டாளத்தையும் அழைத்து சென்றிருந்தார்.

சீன அதிபருடன் டொனால்டு ட்ரம்ப் நடத்திய பேச்சுவார்த்தை பெரிய அளவில் பயனளிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதோடு ஹார்மூஸ் ஜலசந்திக்கு சீனா தனது படைகளை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த கோரிக்கையையும் சீனா நிராகரித்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

டொனால்டு ட்ரம்ப் தனது சீனா பயணத்தை முடித்துக்கொண்டு அதிகாரிகளுடன் தாயகத்திற்குப் புறப்பட்டு சென்றார். அவர்கள் புறப்பட்டு செல்லும்போது அமெரிக்க அதிகாரிகள் சீனாவில் தங்களுக்குக் கிடைத்த பரிசு பொருட்கள், பேட்ஜ்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மொபைல் போன்கள் உட்பட சீனாவில் கிடைத்த அனைத்து பொருட்களையும் சீனாவிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

அவர்கள் அந்தப் பொருட்களை சீனா விமான நிலையம் வரை எடுத்து வந்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீனாவிற்குச் சுற்றுப்பயணம்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீனாவிற்குச் சுற்றுப்பயணம்

ஆனால் விமானத்தின் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு முன்பு படிக்கட்டுக்கு அருகில் இருந்த குப்பை தொட்டியில் அனைத்து பொருட்களையும் போட்டுவிட்டு தங்களது விமானத்தில் ஏறினர்.

சீனாவில் இருந்த எந்தப் பொருட்களையும் எடுத்து வரக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அமெரிக்கா கட்டளையிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. சீனா தரப்பில் கொடுக்கப்பட்ட ஒரு பொருளைக்கூட விமானத்தில் எடுத்து வரக்கூடாது என்று தெரிவித்து இருந்தனர்.

இதை அமெரிக்க அதிபருடன் சீனாவிற்குச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் உறுதிபடுத்தி இருக்கிறார். அதோடு அது தொடர்பான காணொளிகளும் வைரலாகி இருக்கிறது. சீனா கொடுத்திருக்கும் பொருட்கள் மூலம் உளவு பார்க்கும் அபாயம் இருப்பதாகவும், சைபர் அச்சுறுத்தல் இருக்கும் என்ற அச்சம் காரணமாகவும் அமெரிக்கா இது போன்று செய்திருக்கும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு மேற்கொண்ட உயர்மட்ட தூதரகப் பயணத்தின்போது, கடுமையான ஒட்டுக்கேட்பு மற்றும் இணைய பாதுகாப்பு காரணமாக அமெரிக்கக் குழுவினர் அனைவரும் மிகக் கடுமையான "டிஜிட்டல் கட்டுப்பாடுகளின்" கீழ் வைக்கப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையே அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தயாராகி வருகிறது. இருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தையில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை. பாகிஸ்தான் மேற்கொண்ட சமரச முயற்சி பயனளிக்கவில்லை.

இதையடுத்து வேறு சில நாடுகளும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. மேலும் இதுவரை ஈரான் நிரந்தரமாக அணு ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்று கூறி வந்த டொனால்டு ட்ரம்ப், இப்போது 20 ஆண்டுகளுக்காவது அணு ஆயுத திட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

'அரசை விமர்சித்த டிவி சானல்கள் அரசு கேபிளில் முடக்கமா?' - எதிர்க்கட்சிகள் கண்டனம்; ராஜ்மோகன் பதில்

தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24X7, தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்... மேலும் பார்க்க

3 செய்தி தொலைக்காட்சிகள் அரசு கேபிளில் இருந்து நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம்: அரசு விளக்கம்

செய்தி தொலைக்காட்சிகள் தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகச் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். பாலிமர், நியூஸ் தமிழ் 24*7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி ... மேலும் பார்க்க

நெஞ்சை உலுக்கும் சோகம்: குடும்பத்தினர் 8 பேர் தீயில் கருகி இறந்ததை அறியாமலேயே முதியவர் மரணம்!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராதே ஷியாம் அகர்வால் கடுமையான இதய நோய் காரணமாக டெல்லி சாகேத் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ம... மேலும் பார்க்க

வன்னியரசை கவனித்த ஆனந்த்; அமைச்சர்களுக்கு நடுவே ஒரு பவர் சென்டர்! - சிங்கப்பெண் விழா ஹைலைட்ஸ்!

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்திருந்தார். அரசு நிகழ்வில் விஜய்யின் திரைப்பட பாடல் ஒலிக்கப்பட்டது, அமைச்சர்களுக்கு நடுவே அமர்ந்திரு... மேலும் பார்க்க

மம்தா பானர்ஜி இல்லத்திற்குள் நுழைந்து சிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை; மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் கொல்கத்தா இல்லத்தில், மாநில குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்... மேலும் பார்க்க

மம்தாவுக்குப் பின்னடைவு - சோதனை, சர்ச்சை, சம்மன்: மேற்கு வங்கத்தின் `அதகள' அரசியல் | Timeline

மூன்றுமுறை முதல்வர் பதவியில் இருந்த மம்தா பானர்ஜி, 2026 சட்டமன்றாத் தேர்தலுக்குப் பிறகு பெரும் துயரத்துக்கு ஆட்பட்டிருக்கிறார். ஆட்சி, அதிகாரம், கட்சி, தொண்டர்கள் என பரபரப்பாக இயங்கி, பவர் சென்டராக இர... மேலும் பார்க்க