செய்திகள் :

மறைந்த 'என் இனிய தமிழ் மக்களே'-ன் குரல் - 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா காலமானார்

post image

இயக்குநர் இமயம் என்று தமிழ் திரையுலகால் செல்லமாக அழைக்கப்படுபவர் 'பாரதிராஜா'.

1977-ம் ஆண்டு '16 வயதினிலே' மூலம் கோலிவுட்டில் தனது காலடியை எடுத்து வைத்தார் பாரதிராஜா. அந்த முதல் படமே அவருக்கு அப்ளாஸ்களையும், பாராட்டுகளையும் அள்ளிக்கொடுத்தது.

கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை என இவருடைய அடுத்தடுத்த படைப்புகள் அனைத்தும் சக்சஸ்தான்.

இயக்குநராக இவர் தமிழில் மட்டும் சுருங்கிவிடவில்லை. இந்தி, தெலுங்கு மொழிப் படங்களையும் இயக்கி அந்தக் காலத்திலேயே பான் இந்திய இயக்குநராக வலம் வந்தார்.

பாரதிராஜா
பாரதிராஜா

முதல் மரியாதை, கருத்தம்மா, கடல் பூக்கள் என ஆறு தேசிய விருதுகளும், 16 வயதினிலே, புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களுக்கு ஆறு தமிழ்நாடு விருதுகளும் பாரதிராஜாவின் கைதேடி வந்தன.

2004-ம் ஆண்டு பத்மஶ்ரீ விருதும் இவருக்குக் கொடுக்கப்பட்டது. சில நாடகங்களையும் இயக்கியுள்ளார்.

தமிழ் திரையுலகிற்கு இவர் சிறந்த படங்களை மட்டும் தருவதோடு நிறுத்திக்கொள்ளவில்லை.

நடிகைகள் ராதிகா, ரேவதி, ராதா, நடிகர்கள் கார்த்திக், நிழல்கள் ரவி எனச் சிறந்த நடிகை, நடிகர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்துள்ளார்.

2020-ம் ஆண்டு 'மீண்டும் ஒரு மரியாதை' திரைப்படத்திற்குப் பிறகு, திருச்சிற்றம்பலம், வாத்தி, மகாராஜா என தமிழ் திரையுலகில் குணசித்திர நடிகராக பிசியானார்.

2025-ம் ஆண்டு அவரது மகன் மற்றும் நடிகர் மனோஜ் இறப்பிற்குப் பிறகு, பாரதிராஜாவை உடல்நலப் பிரச்னை மிகவும் பாதித்தது.

சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர்ந்து இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், சிகிச்சைக்குப் பலனளிக்காமல் இன்று தனது 84 வயதில் காலமாகியுள்ளார் பாரதிராஜா.

Jio Hotstar: 'த்ரிடம்', 'லிங்கம்' - இம்மாத ஜியோ ஹாட்ஸ்டார் லைன் அப்-கள் என்னென்ன?

ஜூன் மாத ரிலீஸாக அடுத்தடுத்து ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் படங்களும், சீரிஸ்களும் வரவிருக்கின்றன. ஷேன் நிகமின் 'த்ரிடம்', யோகி பாபுவின் 'கெணத்த காணோம்', கதிரின் 'லிங்கம்' வெப் சீரிஸ் என இம்மாதத்திற்கான ஹா... மேலும் பார்க்க

Bharathiraja: "ரெட்டை சடை பின்னல் போட்ட மாதிரி உன்னை வச்சு ஒரு படம்" - பாரதிராஜா குறித்து குஷ்பு | Live Updates

விஜய் நேரில் அஞ்சலிசென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே நேரில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நடிகை ... மேலும் பார்க்க

Habeebi: ''நான் 10-வது படிக்கும்போது நடிச்ச படம் இது..!" - மாளவிகா மனோஜ் பேட்டி

'ஜோ', 'ஆண் பாவம் பொல்லாதது' என இரண்டு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் மக்களுக்கு ஃபேவரைட்டாகி மிளிர்கிறார் நடிகை மாளவிகா மனோஜ். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் 'ஹபீபி' திரைப்படம் இ... மேலும் பார்க்க

'பாகுபாட்டை உருவாக்கிய முறை' சென்சாரில் 'தட்கல்' முறை ரத்து! - சின்ன படங்களுக்கு இதனால் என்ன பயன்?

தணிக்கை வாரியத்தில் கடந்த சில வருடங்களாகப் பின்பற்றப்பட்டு வந்த 'தட்கல்' முறை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு திரைப்படத்திற்கு அவசரமாகத் தணிக்கைச் சான்றிதழைப் பெற்றுத் திரையரங்க ரிலீஸுக்குக் ... மேலும் பார்க்க

``வாழ்த்து சொல்லி உள்ளே வந்த எஸ்.வி.சேக‌ர் சங்கத்தை கபளீகரம் செய்துட்டார்"- வீதிக்கு வந்த பஞ்சாயத்து

பெப்சிக்குப் போட்டியாக தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்களின் ஆதரவோடு தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பில் தலைவர் எஸ்.வி.சேகர் - செயலாளர் பாபு ஆகியோருக்கு இடையில் மோதல் உண்டாகி, ப... மேலும் பார்க்க