செய்திகள் :

கரும்புக் கட்டுப்பாட்டு சட்டம் ரத்து... நிம்மதியில் கரும்பு விவசாயிகள்!

post image

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

சர்க்கரை ஆலைகளுக்குச் சாதகமாக, கரும்பு விவசாயிகளைக் காவு கொடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த ‘கரும்புக் கட்டுப்பாட்டு சட்டம் - 2026’, தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் கரும்பு விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி இது என விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நிம்மதி கொள்கிறார்கள். கரும்பு விவசாயிகளைப் பொறுத்தவரை, இது மிகவும் ஆபத்தான கருப்புச்சட்டம். இது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால்... விவசாயிகளின் வாழ்க்கை இருளில் தள்ளப்பட்டிருக்கும்.

இந்தியாவில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ‘கரும்புக் கட்டுப்பாட்டு சட்டம் 1966’-க்கு மாற்றாக, இந்தப் புதிய சட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு முன்மொழிந்தது. இந்தச் சட்டத்தின்படி, ‘12.25% பிழிதிறனுக்குக் கரும்பு விலை நிர்ணயிக்கப்படும். சர்க்கரை விற்பனை விலையோடு, கரும்புக்கான விலை இணைக்கப்படும். சர்க்கரை ஆலைகள் நஷ்டம் என்று கருதினால் மாநில அரசின் ஒப்புதலோடு கரும்பு விலையைக் குறைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும்’ என்பன உட்பட, கரும்பு விவசாயிகளுக்கு விரோதமாகவும் சர்க்கரை ஆலைகளுக்கு ஆதரவாகவும் பல ஷரத்துகள் இடம்பெற்றிருந்தன.

ஏற்கெனவே சர்க்கரை ஆலைகளின் பிடியில் சிக்கி, கரும்பு விவசாயிகள், தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆலைகளின் சர்வாதிகாரப் போக்கினால், விவசாயிகள் படும் சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இந்தச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தால் கரும்பு விவசாயிகளை, சர்க்கரை ஆலைகள் மேலும் கசக்கிப் பிழிந்து கண்ணீரில் தள்ளியிருக்கும்.

‘நாடு முழுவதும் உள்ள 5 கோடி கரும்பு விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு முன்மொழிந்த இந்தச் சட்டத்தை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும்’ என்று அகில இந்தியக் கரும்பு விவசாயிகள் சம்மேளனம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு உழவர் நல அமைப்புகள் வலியுறுத்தின.

நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பின் காரணமாக, இந்தக் கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் – 2026 தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இது, விவசாயிகளின் போராட்டத் துக்குக் கிடைத்த வெற்றி. இனியாவது, கரும்பு விவசாயப் பிரதிநிதிகளிடம் முழுமையான விவாதத்தை நடத்தி கருத்துகளைக் கேட்டறிந்து கரும்புக் கட்டுப்பாட்டு சட்டம் - 1966-ல் தேவையான திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

கரும்பு விவசாயிகளின் காலைச் சுற்றிய, கரும்புக் கட்டுப்பாட்டு சட்டம்-2026 என்ற கொடிய பாம்பு தற்போது தற்காலிகமாக நீங்கியுள்ளது. வேறொரு வடிவத்தில் புதிய ஆபத்து ஏதேனும் உருவெடுக்காமல் இருக்க வேண்டும். இதற்கு மத்திய ஆட்சியாளர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

- ஆசிரியர்

ஈரோடு: காலி மதுபாட்டில் விவகாரம், 3-வது நாளாக மூடப்பட்டுள்ள மதுபான கடைகள்!

காலி மதுபாட்டில்களை பொதுவெளிகளில் வீசிச் செல்வதால் பெரிய அளவிலான சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகின்றன. விவசாயிகள், வனவிலங்குகள், கால்நடைகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதுடன், விளைநிலங்களும் ... மேலும் பார்க்க

வேளாண் கடன் தள்ளுபடி… முதல்வர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!‘கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ எனச் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் வாக்குறுதி அளித்திருந்தது. விவசாய... மேலும் பார்க்க

இந்தியாவில் அறிமுகமான 'America First': இனி அமெரிக்கா விசா நேர்காணலுக்கு யாருக்கு முன்னுரிமை?

அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தற்போது இந்திய பயணத்தில் இருக்கிறார்.நேற்று இந்தியாவில், 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' என்கிற விசா நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளார் அவர்.அமெரிக்கா ஃபர்ஸ்ட்‌ என்ப... மேலும் பார்க்க

தாமதமாகும் நெல் கொள்முதல் : முளைத்த நெல்லை கையில் ஏந்தி கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!

முளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லைமுளைத்த நெல்லை மேலும் பார்க்க