செய்திகள் :

Jio Hotstar: 'த்ரிடம்', 'லிங்கம்' - இம்மாத ஜியோ ஹாட்ஸ்டார் லைன் அப்-கள் என்னென்ன?

post image
ஜூன் மாத ரிலீஸாக அடுத்தடுத்து ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் படங்களும், சீரிஸ்களும் வரவிருக்கின்றன. ஷேன் நிகமின் 'த்ரிடம்', யோகி பாபுவின் 'கெணத்த காணோம்', கதிரின் 'லிங்கம்' வெப் சீரிஸ் என இம்மாதத்திற்கான ஹாட்ஸ்டார் லைன் அப்-களை இங்கு பார்ப்போம்.

த்ரிடம் (Dridam):

ஷேன் நிகம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் தினேஷ் பிரபாகர், கிருஷ்ணா பிரபா, மேத்யூ வர்கீஸ், சானியா பாத்திமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம், மே 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் ஜூன் 12-ம் தேதி வெளியாகிறது.

கெணத்தைக் காணோம் (Kenatha Kaanom):

யோகி பாபு நடித்திருந்த இப்படம் மார்ச் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லவ்லின் சந்திரசேகர், ரேச்சல் ரெபெக்கா, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படம், வருகிற ஜூன் 15-ம் தேதி வெளியாகிறது.

கெணத்த காணோம் | Kenatha Kanom
கெணத்த காணோம் | Kenatha Kanom

சேவ் தி டைகர்ஸ் சீசன் 3 (Save The Tigers Season 3)

'சேவ் தி டைகர்ஸ்' வெப் சீரிஸின் முதல் இரண்டு சீசன்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மூன்றாவது சீசன் ஜூன் 19-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. பிரியதர்ஷி புலிகொண்டா, அபினவ் கோமடம், கிருஷ்ணா சைதன்யா, ஜோர்டார் சுஜாதா, பவானி கங்கிரெட்டி, தேவயானி சர்மா, வெண்ணிலா கிஷோர் ஆகியோர் மூன்றாவது சீசனில் நடித்திருக்கிறார்கள்.

துக்ரா கே மேரா பியார் சீசன் 2 (Thukra Ke Mera Pyaar Season 2):

'துக்ரா கே மேரா பியார்' சீரிஸின் இரண்டாவது சீசனில் சஞ்சிதா பாஷு மற்றும் தவல் தாக்கூர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, அனிருத் தவே, பாலக் ஜெயின் மற்றும் புனீத் சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த சீரிஸ் ஜூன் 19-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

லிங்கம் | வெப் சீரிஸ்
லிங்கம் | வெப் சீரிஸ்

லிங்கம் (Lingam):

கதிர், திவ்யா பாரதி, பூர்ணிமா ரவி, சத்யா மற்றும் போஸ் வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சீரிஸை எழுத்தாளர் லக்‌ஷ்மி சரவணக்குமார் இயக்கியிருக்கிறார். இந்த சீரிஸ் ஜூன் 26-ம் தேதி வெளியாகிறது.

`உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா.!' - மறைந்த இயக்குநர் இமயத்தின் புகைப்பட நினைவலைகள்

பாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜா மேலும் பார்க்க

'முகங்களுக்கு முகவரி கொடுத்த இமயம்' - பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர்கள், நடிகைகள் யார் யார்?

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று (ஜூன்.10) காலமானார். இவரின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.1977-ம் ஆண்டு ரஜினி, கமல், ஸ்ரீதேவி இணைந்து நடித்த '16 வயதினிலேயே' படத்த... மேலும் பார்க்க

மறைந்த பாரதிராஜாவிற்கு முழு அரசு மரியாதை - முதல்வர் விஜய் அறிவிப்பு

இன்று இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது 84 வயதில் காலமானார். சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்தில் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். பத்மஶ்ரீ விருது, ... மேலும் பார்க்க

பாரதிராஜா இயக்கி தேசிய விருது பெற்ற 6 படங்கள்! - என்னென்ன தெரியுமா?

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று (ஜூன்.10) காலமானார். பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த சினிமா உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு. இவரின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்... மேலும் பார்க்க

16 வயதினிலேயில் என்ட்ரி: 'எனக்கு முகவரி கொடுத்தவர்' - பாரதிராஜாவுக்கு கவுண்டமணி இரங்கல்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் முதல் படம் '16 வயதினிலே'. அந்தத் திரைப்படமே அவருக்கு அதிரிபுதிரி வெற்றியை அள்ளித் தந்தது. அது மட்டுமல்லாமல், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை ஶ்ரீதேவி ஆகியோர் ஏற்க... மேலும் பார்க்க

Bharathiraja: "ரெட்டை சடை பின்னல் போட்ட மாதிரி உன்னை வச்சு ஒரு படம்" - பாரதிராஜா குறித்து குஷ்பு | Live Updates

விஜய் நேரில் அஞ்சலிசென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே நேரில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நடிகை ... மேலும் பார்க்க