செய்திகள் :

பாரதிராஜா இயக்கி தேசிய விருது பெற்ற 6 படங்கள்! - என்னென்ன தெரியுமா?

post image

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று (ஜூன்.10) காலமானார். பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த சினிமா உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு.

இவரின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தி வருகின்றனர்.

1977- ம் ஆண்டு ரஜினி, கமல், ஸ்ரீதேவி இணைந்து நடித்த '16 வயதினிலேயே' படத்தின் வழியாக தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் தனது அசாத்தியமான படைப்புகளுக்காக பல விருதுகளைக் குவித்திருக்கிறார்.

பாரதிராஜா
பாரதிராஜா

அந்தவகையில் பாரதிராஜா இயக்கி தேசிய விருது பெற்ற படங்கள் என்னென்ன என்று பார்ப்போம்...

இயக்குநர் பாரதிராஜா தனது படைப்புகளுக்காக இதுவரை 6 தேசிய விருதுகளை வென்று சாதனைப் படைத்திருக்கிறார்.

1981-ஆம் ஆண்டு அவர் தெலுங்கில் இயக்கிய 'சீதாகோக சிலுகா' (தமிழில் அலைகள் ஓய்வதில்லை) திரைப்படம் சிறந்த தெலுங்குத் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து, 1985-இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த காவியமான 'முதல் மரியாதை' சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்து.

அதன் பிறகு, 1987-இல் சாதியக் கட்டமைப்புகளுக்கு எதிராகப் புரட்சிகரமான கருத்துக்களைப் பேசிய 'வேதம் புதிது' திரைப்படம் சமூகப் பிரச்சினைகளை அலசும் சிறந்த திரைப்படத்திற்கான விருதைத் தட்டிச் சென்றது.

பாரதிராஜா
பாரதிராஜா

1994-ஆம் ஆண்டு பெண் சிசுக்கொலை என்ற சமூக அவலத்தை நெஞ்சை உலுக்கும் வகையில் வெளிச்சமிட்டுக் காட்டிய 'கருத்தம்மா' திரைப்படம் குடும்ப நலனை வலியுறுத்தும் சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டது.

தொடர்ந்து, 1996-இல் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் உணர்வுப்பூர்வமான வாழ்க்கையை விவரித்த 'அந்திமந்தாரை' திரைப்படம் மீண்டும் ஒருமுறை சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.

இறுதியாக, 2001-ஆம் ஆண்டு மீனவ மக்களின் வாழ்வியலையும் ஆழமான நட்பையும் அலைகளின் பின்னணியில் சொன்ன 'கடல் பூக்கள்' திரைப்படத்திற்காக பாரதிராஜா அவர்களுக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

"அல்லிநகரத்தில் பிறந்து அழியாத படைப்புகளைக் கொடுத்த பாரதிராஜா" - ஸ்டாலின் நேரில் அஞ்சலி

'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். அதன் பின், பாரதிராஜா நினைவு குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை..."தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்... மேலும் பார்க்க

Bharathiraaja: 'சட்டையை பிடித்து வெளியே தள்ளினார்கள்!' - சபதம் எடுத்து வென்ற பாரதிராஜா!

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். சினிமாவின் அத்தனை முன்னேற்றங்களிலும் பாரதிராஜாவின் த... மேலும் பார்க்க

'இந்திய சினிமா மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜாவை இழந்திருக்கிறது!' - நடிகர் சிரஞ்சீவி

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், " இந்திய சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான ப... மேலும் பார்க்க

"பாரதிராஜாவின் பெயரில் ஒரு விருது வழங்க வேண்டும்" - முதல்வர் விஜய்க்கு சித்ரா லக்ஷ்மணன் கோரிக்கை

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். இந்நிலையில், இயக்குநரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சும... மேலும் பார்க்க

`உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா.!' - மறைந்த இயக்குநர் இமயத்தின் புகைப்பட நினைவலைகள்

பாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜா மேலும் பார்க்க

'முகங்களுக்கு முகவரி கொடுத்த இமயம்' - பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர்கள், நடிகைகள் யார் யார்?

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று (ஜூன்.10) காலமானார். இவரின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.1977-ம் ஆண்டு ரஜினி, கமல், ஸ்ரீதேவி இணைந்து நடித்த '16 வயதினிலேயே' படத்த... மேலும் பார்க்க