செய்திகள் :

'முகங்களுக்கு முகவரி கொடுத்த இமயம்' - பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர்கள், நடிகைகள் யார் யார்?

post image

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று (ஜூன்.10) காலமானார். இவரின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1977-ம் ஆண்டு ரஜினி, கமல், ஸ்ரீதேவி இணைந்து நடித்த '16 வயதினிலேயே' படத்தின் வழியாக தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, கேமராவுக்குப் பின்னால் மட்டுமல்ல, கேமராவுக்கு முன்னால் நிற்கும் பல முகங்களுக்கு முகவரி கொடுத்தவர்.

பாரதிராஜா
பாரதிராஜா

தமிழ் சினிமா வரலாற்றில் அதிக அளவில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தி, அவர்களை உச்ச நட்சத்திரங்களாக மாற்றிய பெருமை பாரதிராஜாவுக்கு உண்டு. அந்தவகையில் அவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள், நடிகைகள் யார் யார் என்று பார்ப்போம்.

பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகள் யார் யார்?

ராதிகா சரத்குமார்: 'கிழக்கே போகும் ரயில்' (1978) படத்தின் மூலம் பாஞ்சாலியாக அறிமுகமானார். இன்று வரை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருக்கிறார்.

ராதா: 'அலைகள் ஓய்வதில்லை' (1981) திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, 80-களின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

ரேவதி: 'மண் வாசனை' (1983) திரைப்படத்தில் முத்தழகாக அறிமுகமாகி, பின்னாளில் தேசிய விருது பெறும் அளவிற்கு அசாத்திய திறமையால் உயர்ந்தார்.

ராதிகா
ராதிகா

ரேகா: 'கடலோரக் கவிதைகள்' (1986) படத்தில் ஜெனிபர் டீச்சராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தார்.

ரஞ்சிதா: 'நாடோடித் தென்றல்' (1992) திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

பிரியாமணி: 'கண்களால் கைது செய்' (2004) படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு, பின்னாளில் தேசிய விருது பெற்ற சிறந்த நடிகையாக உயர்ந்தார்.

பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர்கள் யார் யார்?

கார்த்திக்: நடிகர் முத்துராமனின் மகனான இவரை 'அலைகள் ஓய்வதில்லை' (1981) படத்தின் மூலம் அறிமுகம் செய்து, தமிழ் சினிமாவிற்கு ஒரு 'நவரச நாயகனை' தந்தார்.

பாண்டியன்: 'மண் வாசனை' (1983) படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

நெப்போலியன்: 'புது நெல்லு புது நாத்து' (1991) படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார்.

கார்த்திக்
கார்த்திக்

மனோஜ் பாரதிராஜா: தனது மகன் மனோஜை 'தாஜ்மஹால்' (1999) திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.

சுதாகர்: 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் ராதிகாவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

தவிர குணச்சித்திர நடிகர்களாக ஜனகராஜ், வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, சந்திரசேகர் போன்ற பல திறமையான நடிகர்களைத் தனது படங்கள் மூலம் அடையாளப்படுத்தியவர் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.!

"அல்லிநகரத்தில் பிறந்து அழியாத படைப்புகளைக் கொடுத்த பாரதிராஜா" - ஸ்டாலின் நேரில் அஞ்சலி

'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். அதன் பின், பாரதிராஜா நினைவு குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை..."தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்... மேலும் பார்க்க

Bharathiraaja: 'சட்டையை பிடித்து வெளியே தள்ளினார்கள்!' - சபதம் எடுத்து வென்ற பாரதிராஜா!

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். சினிமாவின் அத்தனை முன்னேற்றங்களிலும் பாரதிராஜாவின் த... மேலும் பார்க்க

'இந்திய சினிமா மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜாவை இழந்திருக்கிறது!' - நடிகர் சிரஞ்சீவி

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், " இந்திய சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான ப... மேலும் பார்க்க

"பாரதிராஜாவின் பெயரில் ஒரு விருது வழங்க வேண்டும்" - முதல்வர் விஜய்க்கு சித்ரா லக்ஷ்மணன் கோரிக்கை

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். இந்நிலையில், இயக்குநரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சும... மேலும் பார்க்க

`உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா.!' - மறைந்த இயக்குநர் இமயத்தின் புகைப்பட நினைவலைகள்

பாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜா மேலும் பார்க்க

மறைந்த பாரதிராஜாவிற்கு முழு அரசு மரியாதை - முதல்வர் விஜய் அறிவிப்பு

இன்று இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது 84 வயதில் காலமானார். சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்தில் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். பத்மஶ்ரீ விருது, ... மேலும் பார்க்க