செய்திகள் :

சென்னை: சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர்!

post image

வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் வேலப்பன் என்பவர், சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அசோக் நகர் போலீஸார் வேலப்பனை போக்சோ வழக்கில் கைதுசெய்தனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இந்நிலையில் காவலர் வேலப்பனை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "சென்னை பெருநகர காவல், R-8 வடபழனி காவல் நிலைய குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமைக் காவலர் P.வேலப்பன் (த.கா.51236) என்பவர் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக W-26 அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, தலைமைக் காவலர் வேலப்பன் என்பவரை நேற்று (28.06.2026) கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 311 ன் கீழ், மேற்படி தலைமைக் காவலர் P.வேலப்பன் என்பவர் இன்று (29.05.2026) பணி நீக்கம் (Dismissal from Service) செய்யப்பட்டார்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தஞ்சாவூர்: பட்டப்பகலில் அடித்து நொறுக்கப்பட்ட வீடு; கதறிய பெண்... என்ன நடந்தது?

ஓட்டு வீடு, பெண் ஒருவர் கதறி கொண்டு இருக்க ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டப்பகலில் அந்த வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிக் கொண்டிருந்தனர். மேற்கூறையில் ஓட்டை உடைத்து நொறுக்குகின்றனர். `அடப்பாவிகளா ஏண்... மேலும் பார்க்க

`என்னை போகவிடு' கெஞ்சிய கடற்படை அதிகாரியின் மனைவி; பாலியல் வன்கொடுமை; கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவை சேர்ந்தவர் அய்யாஸ் தாஜ்(26). இவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்த 24 வயது பெண் அதே ஊரில் வசித்து வந்தார். அவரது கணவர் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்பெண்ணின் கண... மேலும் பார்க்க

சென்னை: தங்க காசு மோசடி வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் - பின்னணி விவரிக்கும் அதிகாரிகள்!

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி என்பவர் தொடர்பு கொண்டு, எங்களிடம் 4,500 ரூபாய் முதலீடு செய்தால் 15 நாள்களுக்குள் ஒரு கிராம் தங்கக் காசை கொடுப்போம் என கூறி... மேலும் பார்க்க

கோவை: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சாட்சி விசாரணை 24ஆம் தேதி முதல் துவக்கம்

கோவை மாவட்டம் சூலூரில் கடந்த மே மாதம் 21ஆம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவருக்கு உதவிய... மேலும் பார்க்க

`நான் சொல்பவர்களுடன், நீ உறவுகொள்ள வேண்டும்'- நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்; கதறும் மதுரை பெண்

மதுரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக கொடுமை செய்தவர்களை கைது செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். அதன் பின் செய்தியாளார்களை சந்தித்து பேசிய இளம்பெண்,... மேலும் பார்க்க

வேலூர்: சிறுவன் இறப்பில் விலகிய மர்மம்; அடித்துக்கொன்ற கொடூர அத்தை; பகீர் கிளப்பும் `படுபாதக’ செயல்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள மேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி ஆஷா. இவர்களின் 6 வயது மகன் முகிலன். கடந்த 5 ஆண்டுகளாக மனைவி மற்றும் மகனைப் பிரிந்து வாழ்ந்துவந்த ராஜ... மேலும் பார்க்க